ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் ஊத்தங்கரை வித்தியாமந்திர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2009, திசம்பர் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது.
19.12.2009 முற்பகல் 10 மணிக்குத் தொடக்க விழா நடைபெறுகிறது.வித்தியா மந்திர் கல்லூரியின் நிறுவுநர் வே.சந்திரசேகரன்,பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பெ.தங்கராசு,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பேராசிரியர் மா.பா.குருசாமி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இரத்தின. வேங்கடேசன், கவிஞர் இறை.மதியழகன்,முனைவர் தியாகராசன்,தமிழாசிரியர் உஷா, பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெ.மாதையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
துளிர்,மலர்,இதழ் என்னும்ஆய்வரங்கக் கோவைகள் வெளியிடப்பெற உள்ளன.
அழைப்பிதழ்
2 கருத்துகள்:
ஐயா வணக்கம்,நலமாய் உள்ளீர்களா, தங்களின் தமிழ் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள், கோவை உலக தமிழ் மாநாட்டில் "இணைய மாநாடு பற்றி, அதில் நமது வலைப்பதிவாளர்கள் பற்றி, நம் பங்கு பற்றி செய்தி கொடுங்கள்."
மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட தனியார் தொ(ல்)லைக் காட்சி குறித்த தங்களது நையாண்டி ரசனைக்குரியது.தமிழ்க் கருத்தரங்கங்கள் குறித்த செய்திகளை முந்தி முதல் தரும் தங்கள் வலைத்தளம் வாழ்க! வளர்க!
http://andamantamizhosai.blogspot.com/
அன்புடன்
க்.நா.சாந்தி லெக்ஷ்மன்
போர்ட் பிளேயர்
கருத்துரையிடுக