நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்தரங்கம்,சிங்கப்பூர்சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னைக் கலைஞன் பதிப்பகமும் இணைந்து "இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்" என்ற தலைப்பில் ஏழாம் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினைச் சிங்கப்பூரில் நடத்த உள்ளன.

கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 15,16 மே 2010

இடம்:டின்டேல் கல்லூரி-சிங்கப்பூர்


பேராளர் தகுதி: பல்கலைக்கலைக்கழக,கல்லூரி-நிறுவன-பள்ளி ஆசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரை: தமிழிலோ,ஆங்கிலத்திலோ அமையலாம்.

கட்டணம்: கட்டுரை மட்டும் அளிப்பவர்கள் உருவா 700-00

கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்கள்(தமிழகத்திலிருந்து)உருவா 38700-00
(வானூர்திக் கட்டணம்,உணவு,தங்குமிடம்,சிங்கப்பூர்,மலேசியா சுற்றுலா சென்றுவர)

கட்டணத்தை வரைவோலையாகக் கலைஞன் பதிப்பகம்(KALAIGNAAN PATHIPAGAM) என்னும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளும் வகையில் அனுப்பலாம்.

பேராளராகப் பங்கேற்க முன் கட்டணம் உருவா 3000-00 அனுப்ப நிறைவுநாள் 31-01-2010.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் அனுப்ப நிறைவுநாள் 15.03.2010.

பிற விவரங்களுக்கு: முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
செல்பேசி: 98422 81957

பயண விவரங்களுக்கு: பேராசிரியர் அபிதா சபாபதி : 96770 37474

கட்டுரை,வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைஞன் பதிப்பகம்,19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,சென்னை-600017
பேசி: 044-24313221 044- 24345641

3 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

சிங்கப்பூர் கருத்தரங்க அறிவிப்புக்கு நன்றி இளங்கோ. முயற்சி செய்வோம் செல்வதற்கு.

Mannar Mannan Maruthai சொன்னது…

அன்பு இளவலுக்கு,
வணக்கம். ம்லேசியப் பேராள்ர்களும் கலந்து கொள்ளலாமா? தாங்கள் கலந்துகொள்வீர்களா? ஆவலோடு காத்திருக்கிறேன்.

ம. மன்னர் மன்னன்

கே.பாலமுருகன் சொன்னது…

தங்களின் சிங்கப்பூர் கருத்தரங்கம் பயனளிக்கும் வகையில் அமைய என் வாழ்த்துகள். வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் வருகிறேன்