மூத்த தமிழறிஞரும்,தமிழ் ஓசை நாளிதழின் மொழிநடை ஆசிரியருமான புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ விழா 12.12.2009 காரிக்கிழமை மாலை 3 மணிக்குச் சென்னைத் தேவநாயப்பாவாணர் நூலக அரங்கில் பேராசிரியர் ம,இலெ.தங்கப்பா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
பாவலர் தமிழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்ற மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பவழ விழா மலரினை வெளியிடுகிறார்.
சிந்தனையாளன் ஆசிரியர் வே.ஆனைமுத்து,முனைவர் பொற்கோ,முனைவர் க.இராமசாமி, பேராசிரியர் பி.விருத்தாசலனார்,தோழர் சி.மகேந்திரன்,தோழர் பெ.மணியரசன்,வழக்குரைஞர் ச.செந்தில்நாதன்,இயக்குநர் தங்கர்பச்சான்,இயக்குநர் சீமான்,இயக்குநர் வ.கௌதமன்,தோழர் வீர.சந்தனம்,கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் புலவர். சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றுகின்றனர்.
முனைவர் ந.அரணமுறுவல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.
2 கருத்துகள்:
பவழ விழா காணும் கி.த.ப. அவர்களுக்கு நல்வாழ்த்துகள். அன்னார் நீடூழி வாழ்க!
பவழ விழா நாயகர் புலவர். கி.த.பச்சையப்பன் அவர்களுக்கு எனதினிய நல் வாழ்த்துக்கள்.
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207
கருத்துரையிடுக