நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 டிசம்பர், 2008

புதுச்சேரியில் என் நூலகத்தில் வெள்ளம் புகுந்தது...

அன்புள்ள தமிழ் இணைய உலக நண்பர்களே!

27.11.2008 இரவு பதினொரு மணிக்குப் புதுச்சேரியில் எங்கள் வீட்டின் உள்ளே வெள்ளம் புகுந்தது.உறங்கிய குழந்தைகளை முதலில் நனைத்தது.பிறகு பல இலட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மூழ்கடித்தது. 28.11.08 வைகறை மூன்று மணி வரை புத்தக மீட்புப்பணி நடந்தது.

முதன்மையான நூல்கள் மீட்கப்பட்டன.மூன்று நாள் முயற்சிக்குப் பிறகு நீர் வடிகட்டி இயல்பு வாழ்க்கைக்கு வந்தோம்.

நூல்களை வெயிலில் உணர்த்துவது,பெட்டிகளில் அடைத்து வைப்பதில் ஈடுபட்டு வருகிறேன்.இணைய இணைப்பு இல்லை.எனவே மழைக்காட்சிகள் படமெடுக்கப்பட்டாலும் இணைக்க முடியவில்லை.விரைவில் மழைக்காட்சிகள் வெளிவரும். எங்கள் மீட்புப் பணிப் பட்டறிவுகளை விரிவாகப் பகிர்ந்துகொள்வேன்.ஆறுதல் கூறிய அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நன்றி.

2 கருத்துகள்:

SurveySan சொன்னது…

வீட்டுக்குள் வெள்ளம் ஏன் புகுந்தது?

உங்க தப்பா? மாநகராட்சி/முனிசிபாலிட்டி தப்பா? இல்ல, சாதாரண இயற்கையின் சீற்றமா?

ஏன் கேக்கரேன்னா, சென்னையில் எல்லாம், முட்டாப் பசங்க, ரோட்டு மேல ரோட்ட போட்டு போட்டு, சுத்தி இருக்கும் வீட்டையெல்லாம், குளம் குட்டையாக்கிடறாங்க, மழை காலத்துல. அங்கையும் அப்படித்தானா?

Unknown சொன்னது…

:((