நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 13 டிசம்பர், 2008

தமிழாசிரியர் மாநாடு சென்னையில் தொடங்கியது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்துள்ள எட்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு சென்னை ராயல் மெரிடியன் உணவகத்தில் இன்று காலை 10.35
மணிக்குத் திட்டமிட்டபடி தொடங்கியது.திரு.சு.ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திரு.சகாதேவன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.சிங்கப்பூரிலிருந்து ஏறத்தாழ 80 பேராளர்கள்
கலந்துகொண்டுள்ளனர்.மலேசியாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையிலிருந்தும்,இலண்டனிலிருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் பேராளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். பேராசிரியர் இரா.இளவரசு உள்ளிட்ட தமிழறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்

கருத்துகள் இல்லை: