நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 10 டிசம்பர், 2008

சென்னையில் உலகத் தமிழாசிரியர் மாநாடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பேற்று நடத்தும் எட்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு 13,14-12-2008(காரி,ஞாயிறு) அன்று சென்னை லீ ராயல் மெரிடியன் உணவகத்தில்(கத்திப்பாரா அருகில்) நடைபெற உள்ளது.

காரிக்கிழமை காலை தொடங்கும் மாநாட்டில் சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழாசிரியர்கள் கலந்துகொண்டு தமிழ் கற்றல்,கற்பித்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் படிக்க உள்ளனர்.

யான் அறிந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், மலேசியாவிலிருந்து பேராசிரியர் மன்னர்மன்னன்,இலண்டனிலிருந்து திரு.சிவகுருநாதபிள்ளை கலந்துகொள்ள உள்ளனர்.வெளிநாட்டுப் பேராளர்கள் மிகுதியானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

யான் 14.12.2008(ஞாயிறு) காலை 11முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ள அமர்வில் "ஆசிரியர்கள் மாணவர்கள் அறியவேண்டிய மின்னஞ்சல்,வலைப்பதிவுகள்"
என்னும் தலைப்பில் கட்டுரை படிக்க உள்ளேன்.மாநாட்டு அரங்கில் இணைய இணைப்பு இருக்கும் என்பதால் தமிழ் இணையம் சார்ந்தவாறு என் உரையை அமைத்துக்கொள்வேன்.

என் உரை இடம்பெறும் நேரத்தில் இணைய இணைப்பில் அன்பர்கள் இருப்பின் உரையாடலுக்கு அழைப்பேன்.ஓய்வு கிடைத்தால் எங்களுடன் கலந்துகொண்டு உரையாடலாம்.மாநாட்டு ஏற்பாடுகளைத் திரு.சு.ஈசுவரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.

3 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

மாநாடு சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள்..

தேவன் மாயம் சொன்னது…

congrats!!!1
Deva..

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வாழ்த்துக்கள்