வியாழன், 27 நவம்பர், 2008
புதுவை மழைக்காட்சி...
எங்கள் வீட்டில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி
புதுவையில் கடும் மழை.மூன்று நாளாக மின்சாரம் இல்லை.தொலைபேசி சேவை குறைவு,புயல் காற்று.மரங்கள் பல வீழ்ந்தன.வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
மக்கள் இரவு முழுவதும் தண்ணீரில் நின்றனர்.பாம்பு,பூரான்,தேள் புறப்பட்டன.எங்கள் வீட்டைச்சுற்றித் தண்ணீர் தேங்கியது.இன்னும் அரைமணிநேரம் மழைபெய்திருந்தால்
மிகப்பெரிய அழிவு என் ஆய்வு முயற்சிக்கு நேர்ந்திருக்கும்.ஆம்.பல இலக்கம் மதிப்புள்ள நூல்கள்,ஆய்வுரைகள்,ஒலிநாடாக்கள்,சான்றிதழ்கள்,துணிமணிகள் பாழ்பட்டிருக்கும்.
இதழ்களுக்கு எழுதிய தொடர்கள் அனுப்ப முடியாதபடி கணிப்பொறி,இணையப்பணிகள் பாதிப்பு ஏற்பட்டன.கால்மணி நேரத்திற்கு முன் மின்சாரம் வந்தது.உடன் செய்திகளுடன் வந்துநிற்கிறேன்.
கல்லூரி விடுமுறை இல்லை.சென்று வந்தேன்.தேர்வுநாள்.தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் விடுமுறை.மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.இன்னும் மழைபெய்துகொண்டுதான் உள்ளது.
எங்கள் குடியிருப்புத் தெரு
எங்கள் வீட்டைச் சுற்றி நீர்சூழ்ந்த காட்சி...
எங்கள் பக்கத்து வீட்டுள் தண்ணீர் நுழைந்தகாட்சி
பக்கத்து வீட்டின் உள்ளே தண்ணீர்
வீட்டுப் பொருள்களைக் குவித்துப்போட்ட தண்ணீர்ப்பெருக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
உங்கள் பகுதியின் நிலை மிக மோசமாகவுள்ளது.கவனத்துடன் இருங்கள்.
ஐயா மிகுந்த கவலை அடைகின்றோம். தங்களின் நிலைமை மாற இறைவனைப் பிரார்திக்கின்றோம்.
நீங்கள் சேகரித்து வைத்திருந்த பல அரிய நூல்கள் நீருக்கு இரையாகிவிட்டதாய் கேள்விப்பட்டேன். மிகவும் வருந்துகிறேன்.. :(
நீங்கள் சேகரித்து வைத்திருந்த பல அரிய நூல்கள் நீருக்கு இரையாகிவிட்டதாய் கேள்விப்பட்டேன். மிகவும் வருந்துகிறேன்.. :(
அன்பின் இளங்கோவன்,
தற்போது நிலமை எப்படி இருக்கிறது ?
கருத்துரையிடுக