நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 24 மே, 2014

பொதிகை தொலைக்காட்சிக்கு நன்றி...பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை இன்று(24.05.2014) முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை ஒளிபரப்பி உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பொதிகை தொலைக்காட்சியின் புதுச்சேரி நிலையத்தாருக்கு நன்றி. இதில் சிறப்பாகப் பங்காற்றிய பரதநாட்டியக் கலைஞர், ஒலிவட்டுகள் உதவியோர், ஒளிஓவியர், படத்தொகுப்பாளர், உதவியாளர்கள், தயாரிப்பாளர், மற்றும் நிலையத்தின் அதிகாரிகள், படப்பிடிப்புக்குத் துணைநின்ற நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மின்னஞ்சல், இணையம், தொலைபேசி, குறுஞ்செய்திகள் வழியாகச் செய்திகளைப் பகிர்ந்தோருக்கும் பாராட்டுமொழிகள் உரைத்தோருக்கும் நன்றி.
தொடர்ந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் எஞ்சிய குரலிசையையும் இத்தமிழுலகம் கேட்டு மகிழ ஆவணப்படுத்துவோம்.


நினைவுக்காக ஒளிபரப்பில் எடுக்கப்பட்ட சில படக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன:கருத்துகள் இல்லை: