நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 26 மே, 2014

தமிழ் இலெமூரியாவின் தமிழ்ப்பணி....  இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் சிறப்பான மாத இதழ் தமிழ் இலெமூரியாவாகும். கடந்த ஏழு ஆண்டுகளாகத் தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே நடையிடும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்றுத் துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில் தமிழ், தமிழர் குமுகாய வளர்ச்சி இலக்கை அடைவதற்குரிய அரிய ஆய்வுகள், வரலாற்று நிகழ்வுகள், இயற்கையை போற்றுதலுக்குரிய நம் கடமைகள், தமிழறிஞர்களின் வாழ்கைக வரலாறு போன்றவை இதன் உள்ளீடுகளாக அமைந்துள்ளன. இயன்றவரை தூய தமிழில் செய்திகளைத் தருவதில் தமிழ் இலெமூரியா முன்னிற்கின்றது.


தமிழ் இலெமூரியா ஆசிரியர் திரு. சு. குமணராசன் அவர்கள்

  கடந்த நாற்பது ஆண்டு காலமாகத் தமிழ், தமிழர் மேன்மைக்காக மும்பை மாநகரில் தொய்வின்றிச் சமூகப் பணி ஆற்றி வரும் திரு சு. குமணராசன் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று வழி நடத்துகின்றார். கண்ணைக் கவரும் வண்ண அமைப்பில் இந்த இதழ் உலாவருவது இதன் தனிச்சிறப்பாகும்.

  இந்திய நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாடு, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், தமிழர்கள் பெருமளவில் வாழும் மத்திய தரைக் கடல் நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களை தன்வயப்படுத்தி சற்றொப்ப மூன்று இலக்கம் தமிழ் ஆர்வலர்களை வாசகர்களாகக் கொண்டுள்ள இதழாகத் தமிழ் இலெமூரியா விளங்குகின்றது. மாதந்தோறும் தவறாமல் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த இதழைத் தமிழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும். இதில் படைப்புகளை வழங்கிப் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

  பல்கலைக்கழக நூலகங்கள், கல்விக் கூட நூலகங்கள், அரசு பொது நூலகங்கள் என அனைத்து இடங்களில் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்ற ஒரு சீரிதழ் இது என்பது இதன் பெருமையின் அடையாளம் ஆகும்.

  இணக்கமான இந்தச் சீரிய கூட்டுணர்வு முயற்சியில் தாங்களும் பங்கேற்று மனித நேய மாண்புகள் பெருகிடவும், தமிழினம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கும் துணை நிற்கலாம். தமிழார்வலர்கள் இந்த இதழை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம். தமிழ்ச்செல்வர்கள் வெற்று ஆரவாரப் பணிகளில் தம் செல்வத்தை இழப்பதைக் காட்டிலும் இந்த இதழ் வளர்ச்சிக்குத் தம் அரும்பொருள் வழங்கி உதவலாம்.

  தமிழ் இலெமூரியாவை வளர்த்தெடுப்பது தமிழ்ப்பற்றாளர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இணையத்தில் படிக்க இங்குச் செல்க

தமிழ் இலெமூரியா கட்டணம்:

ஆண்டு உறுப்பாண்மை: 180 உருவா
மூன்று ஆண்டு : 500 உருவா
வாழ்நாள் கட்டணம்: 5000 உருவா
புரவலர் கட்டணம்: 10, 000 உருவா

தொடர்புக்கு:

Tamil Lemuriya Publications
102 B Wing, Dannes Building,
Veer Savarkar Nagar, Thane (W),
Maharashtra – 400 606, India
Phone : 022 - 25806298

மின்னஞ்சல்: tamil.lemuriya@gmail.com

இணையப்பக்கம்: http://www.tamillemuriya.com/

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி ஐயா
அவசியம் சந்தாதாரராக இணைகின்றேன்