நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 3 மே, 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்(28.05.1914 - 09.06.1981) நூற்றாண்டு விழா - அழைப்பிதழ்


அன்புடையீர் வணக்கம்.
தமிழிசை ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பணிசெய்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க - இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியைச் சிறப்புச்செய்வான் வேண்டி மலேசியாவிலிருந்து வருகைதரும் தமிழுறவுகளுக்கு விழாவில் வரவேற்பு வழங்க உள்ளோம். தமிழிசை ஆர்வலர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

நாள்: 17. 05. 2014, காரி(சனி)க்கிழமை, நேரம்: மாலை 6 மணி
இடம்: செயராம் உணவகம்(Hotel Jayaram), புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் மு.இளங்கோவன்

நோக்கவுரை: முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், தமிழிசை அறிஞர்

முன்னிலை:
டாக்டர்  விக்டர் சுப்பையா (தேசியத் தலைவர், மலேசிய, இந்தியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை)

செந்தமிழ்த் தேனீதிரு. இரா. மதிவாணன், சென்னை

அறிஞர்களைச் சிறப்பித்தல்:
திரு நா. சோமசுந்தரம், கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல்படை

நினைவுரைகள்

தவத்திரு ஊரன் அடிகளார், வடலூர்
புலவர் செந்தலை ந. கௌதமன், பாவேந்தர் தமிழ்ப் பேரவை,சூலூர்
முனைவர் மு. இளமுருகன், தமிழியக்கம், தஞ்சாவூர்
முனைவர் . அங்கயற்கண்ணி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் சு. குமரன்,இந்திய ஆய்வியல்துறை, மலேயா பல்கலைக்கழகம்
திரு. வி. வயித்தியலிங்கம், ஆடுதுறை
திரு. . பிழைபொறுத்தான், சென்னை
புலவர் பொ. வேல்சாமி, நாமக்கல்

சிறப்புரை: பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், சென்னை

நன்றியுரை: பொறிஞர் மு. பாலசுப்பிரமணியன்

அழைப்பில் மகிழும்
-    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் & புதுச்சேரி இலக்கிய வட்டம்



2 கருத்துகள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்ய வணக்கம். பண்ணாய்வான் பசு அவர்களின் நூற்றாண்டுவிழா! சிறப்பாக நடக்க என் இனிய வாழ்த்துகள் அய்யா. 17>18 இங்கு எமது இணையத் தமிழ்ப் பட்டறை என்பதால் நான் வரஇயலாத சூழல். அண்ணன் செந்தலையார், மு.இளமுருகன், அய்யா பொ.வே. முதலானோர் வருவதும் அருமைச் சகோதரர் சு.ப. உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வழாவில் கலந்துகொள்வதும் பெருமைக்குரியது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விழா சிறப்புற அமைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்களின் பணி பாராட்டுக்குரியதாகும்.