நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 12 மே, 2014

தோழர் பெரியார் சாக்ரடீசு மறைவுபெரியார் சாக்ரடீசு

'உண்மை' இதழின் பொறுப்பாசிரியரும், திராவிடர் கழகத் தலைமை நிலைய பேச்சாளரும், அருமைத் தோழருமான பெரியார் சாக்ரடீசு (அகவை 44) அவர்கள் சென்னையில் நேற்று இரவு நடந்த சாலை நேர்ச்சியில் சிக்கி "ராசீவ்காந்தி அரசு மருத்துவமனை"யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தி அறிந்து அருமை நண்பர் பிரின்சு அவர்களிடம் நலம் வினவினேன். மீண்டும் நலம்பெற்று இயக்கப்பணிகளில் ஈடுபடுவார் என்று நம்பியிருந்த வேளையில்  மருத்துவம் னளிக்காமல் இன்று(12.05.2014) இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அருமை தோழரின் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும்ன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2 கருத்துகள்:

நா.முத்துநிலவன் சொன்னது…

தோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு பற்றிக்கேள்விப்பட்டு, இன்றைய செய்தித்தாளிலும் பார்த்து மிகுந்த மனவேதனையடைந்தேன். கொள்கைப் பிடிப்புள்ள செயல்வீரரை இழந்தோம். ஓரிருமுறையே நேரில் சந்தித்திருந்தாலும், அவரது பணிகள் பற்றித் தொடர்ந்து கேள்விப்பட்டு மகிழ்ந்திருக்கிறேன். என்னுடனான சில கருத்துவேறுபாடுகளை மிகவும் கண்ணியமாக வெளிப்படுத்தத் தயங்காதவர், அவரது இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்புத்தான். அவர் நடைமுறைப்படுத்த எண்ணிஉழைத்த திசையில் நம் பயணத்தை உறுதியாகத் தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். பகிர்ந்துகொண்ட தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.

நா.முத்துநிலவன் சொன்னது…

தோழர் பெரியார் சாக்ரடீசின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி முனைவர் வா.நேரு அவர்கள் தந்திருக்கும் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் - பார்க்க http://vaanehru.blogspot.in/