நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 3 நவம்பர், 2012

மலேசியாவில் 10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு

முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் டைபெற்றது.  இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன.  பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்குத் தமிழ்க்கல்வி குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


மாநாட்டின் நோக்கம்

1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.

2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.

3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.

4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்.


Objectives of the Conference

1.To plan for developments in the teaching and learning of Tamil Language.

2.To explore the use of innovative approaches, and Information and Communication Technology resources for the teaching and learning of Tamil Language.

3.To facilitate the exchange  of views and promote sharing of ideas among Tamil Language teachers from around the world.

4. To promote networking and professional collaboration between Tamil Language educationist from various countries.


ஆய்வுக் கட்டுரைகள்


  • கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

  • ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் 120 சொற்களுக்குள் அமைதல் வேண்டும். 
  • ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து 15.12.2012ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.


  • கட்டுரை தேர்வுக்குழுவின் முடிவுகள் சம்பந்தப்பட்ட பேராளர்களுக்கு 15.01.2013ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.
  • முழு வடிவம் கொண்ட ஆய்வுக்கட்டுரையைத் தட்டச்சு செய்து 28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன

1. கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
       - ஊடகங்களின் தாக்கம்
      - தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு
      - புதுக்கோட்பாடுகள் , Language Teaching Learning Methods ( LTLM )

2. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்வோர்க்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

3. பிறமொழி மாணவர்கள் தமிழை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பயிற்று முறைகள்/நடவடிக்கைகள்

4. புலம்பெயர்ந்த நாடுகளில்/சூழலில் தமிழ்க் கல்வி

5. பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் தமிழ்க் கல்வியின் பங்கும் பணியும்

6. தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மதீப்பீட்டில் புதிய அணுகுமுறை

7. தமிழ்மொழிப் பயன்பாட்டில் கருத்தாடல் திறன் வளர்த்தல்

கட்டுரைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Email : mail@worldtamilteachersconf.org

Contact Address:

10 th World Tamil Teachers Conference
C/O Department of Malaysian Languages & Applied Linguistics,Faculty of Languages and Linguistics
University of Malaya,
50603,Kuala Lumpur

Contact Details:
Chairman: 03-79673142
Secretary: 03-87331590
Tel: 603-7772 1 714
Fax: 603-7967 3 142





1 கருத்து:

கல்விக்கோயில் சொன்னது…

நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.