நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 நவம்பர், 2012

முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் கலகம் செய்யும் இடதுகை - நூல்வெளியீட்டு விழா
முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ள கலகம் செய்யும் இடதுகை என்னும் நூலின் வெளியீட்டு விழா நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2043 (02.12.2012) ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது. 

நீதியரசர் தாவிதன்னுசாமி அவர்கள் நூலை வெளியிட, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் நூலின் முதற்படியைப் பெற்று, சிறப்புரையாற்ற உள்ளார். பிரெஞ்சுப் பேராசிரியர் செவாலியே இரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ப்பேராசிரியர் க.பஞ்சாங்கம், ஆங்கிலப் பேராசிரியர் ராஜ்ஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். 


இ டம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், எண் 2, தமிழ்ச்சங்க வீதி,
வெங்கட்டா நகர், புதுச்சேரி- 605 011.

நாள்: 02.12.2012,ஞாயிறு நேரம்: மாலை 6.30 முதல் 8 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை :  திரு.யுகன் அவர்கள் (நற்றிணைப் பதிப்பகம்)

தலைமை, நூல்வெளியீடு: நீதியரசர் தாவிதன்னுசாமி அவர்கள்

முதற்படி பெறுதல்,சிறப்புரை : எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள்

வாழ்த்துரை  : 

முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் 
 முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் 
 முனைவர் ராஜ்ஜா அவர்கள் 

ஏற்புரை: முனைவர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்அவர்கள்

தொகுப்புரை: முனைவர் ஆ.மணி அவர்கள்

அறிமுக உரை : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

நன்றியுரை : முனைவர் சி.சத்தியசீலன் அவர்கள்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...