நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 நவம்பர், 2012

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து நான்காம் பன்னாட்டுக் கருத்தங்கம் காரைக்குடி அருகில் உள்ள அமராவதி புதூரில் அமைந்துள்ள இராசராசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2013 மே மாதம் 18, 19 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மட்டும் கலந்துகொண்டு கட்டுரை படைக்கலாம்.

பேராளர் பதிவுக் கட்டணம் ; உருவா 700 – 00

ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION, MADURAI -625 021
என்ற முகவரியில் மாற்றத் தகுந்த வரைவோலையாகப் பதிவுக் கட்டணத்தை அனுப்பிவைக்க வேண்டும்.

கட்டுரை, தொகை அனுப்ப இறுதிநாள் : 15.01.2013

தொடர்பு முகவரி:

முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்கள்
துணைப் பொருளாளர், இ.த.ப.மன்றம்,
தமிழியல்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை- 625 021, தமிழ்நாடு, இந்தியா
செல்பேசி: 0091 94886 16100கருத்துகள் இல்லை: