நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 ஜூலை, 2014

புதுச்சேரியில் நூல்வெளியீட்டு விழா – அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா


புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நூலை வெளியிட இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல்

ஒரு சாமானியனின் சாதனை நூல்வெளியீட்டு விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் இன்று 31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ஒரு சாமானியனின் சாதனை என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். நூலின் முதற்படிகளைப் பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர் இரா. பஞ்சவர்ணம், அமெரிக்காவைச் சேர்ந்த தில்லை குமரன், பாரிசு பாலகிருட்டினன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி நூல் திறனாய்வு செய்தார்.

புதுவை அரசின் நலத்துறை, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராஜவேலு அவர்கள் கலந்துகொண்டு அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவியான ஒரு இலட்சத்தை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்

காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் படிக்கும் மாணவிகளும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளும், புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகளும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொண்டனர். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த சுந்தர இலட்சுமிநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்

அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பொறியாளர் கு. இளங்கோவன் தம் கல்விப்பணியை நினைவூட்டி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தன்னம்பிக்கை உரையாற்றினார். முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் நூலை வெளியிட இரா. பஞ்சவர்ணம் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல்

சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராஜவேலு அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் கடற்படை சார்ந்த திரு. சோமசுந்தரம் அவர்கள்மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் மாண்புமிகு அமைச்சர் பெ. இராஜவேலு அவர்கள்.பார்வையாளர்கள்


அரவணைப்பு முனைவர் கு.இளங்கோவன் அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் மாண்புமிகு நலத்துறை அமைச்சர் பெ. இராஜவேலு அவர்கள்

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

விழா நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.