நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 3 ஜூலை, 2014

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்க்கையைப் பேராசிரியர் சுப.வீ. கலைஞர் தொலைக்காட்சியில் நினைவுகூர்கின்றார்…


தமிழிசைக்கு அளப்பரும் தொண்டாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணிகளையும் வாழ்க்கையையும் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நினைவுகூர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்திய நேரம் 04.07.2014 (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு இந்த உரை ஒளிபரப்பானது.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியை நேரடியாகத் தொலைக்காட்சியிலும் இணையம் வழியாகவும் பார்த்தனர். இணையத்தில் பார்க்க கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம்.

நம் பண்பாடு மீட்க ஒற்றை வீரனாய் உழைத்த தமிழிசைத் தலைமகனின் புகழைப் பரப்ப முன்வந்த பேராசிரியர் சுப. வீ. அவர்களுக்கும் ஒளிபரப்பிய  கலைஞர் தொலைக்காட்சிக்கும் நன்றி. 

கருத்துகள் இல்லை: