நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 2 ஜூலை, 2014

இரா. பஞ்சவர்ணம் அவர்களின் அரசமரம் நூல்வெளியீட்டு விழா


பண்ணுருட்டித் தாவரத் தகவல் தொகுப்பு மைய நிறுவுநரும், பண்ணுருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் வரிசையில் அரச மரம் என்னும் நூல் வெளியீட்டு விழா நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் 05.07.2014 இல் நடைபெற உள்ளது.


 பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குநர் திரு. இராசகோபால் தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எஸ். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். 

நூலாசிரியர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை: