நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 7 ஜூலை, 2014

அடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் – பயிலரங்கு


   திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையில் அடித்தள மக்களும் சமூகப் பண்பாட்டுப் பொருண்மைகளும் (socio – Cultural Meaning Systems of Subaltern People) என்னும் தலைப்பிலான பயிலரங்கம் நடைபெறுகின்றது. இதில் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், சமுகப் பண்பாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

நாள்:04.08.2014 முதல் 09.08.2014 வரை

பதிவுக்கட்டணம்: உருவா 100 – 00

பயிலரங்குக் கட்டணம் ஆறுநாட்களுக்கும் உணவு உறையுள் உட்பட 1100.
உறைவிடம் வேண்டாதவர்களுக்கு உருவா 500

தங்களைப் பற்றிய குறிப்புகளுடன்

இயக்குநர்,
தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, 627 002

என்ற முகவரிக்கு 25.07.2014 நாளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:

பேராசிரியர் முனைவர் நா. இராமச்சந்திரன்,
நாட்டார் வழக்காற்றியல் துறை,
இயக்குநர், நாட்டார் வழக்காற்றியில் ஆய்வு மையம்
பாளையங்கோட்டை

கருத்துகள் இல்லை: