நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா




இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டை நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் 14.12.2013 இல் நடைபெறுகின்றது. மூத்த வழக்கறிஞர்  இரா. காந்தி அவர்களின் தலமையில் நடைபெறும் விழாவில் இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். முனைவர் ஔவை நடராசன், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் மு.முத்துவேலு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இலண்டனில் வாழும் செல்வா. செல்லதுரை அவர்கள் ஏற்புரை வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்.

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஐயா
நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.. wordpress இல் நான் எழுதுவதால் கருத்து போட முடியாமல் உள்ளது. பலதடவை வந்து ஏமந்து போனது உண்டு. எல்லா வலைத்தள உறவுகளும் கருத்துச்சொல்லக்கூடிய வகையில் பின்னூட்ட பகுதியை சீர்செய்யமுடியுமா..ஐயா
எனது வலைத்தளமுகவரி-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

செல்வா செல்லதுரை அவர்களைப் பாராட்டுவோம்.
விழா இனிது நடைபெற வாழ்த்துக்கள்