நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 மார்ச், 2013

பிரான்சில் வளரும் தமிழ் - திருக்குறள் அரங்கம்




பிரான்சில் வாழும் தமிழ் அன்பர்கள் தமிழ் இலக்கியங்கள் குறித்து மாதந்தோறும் சிந்தித்து வருவதையும் ஆண்டுதோறும் தமிழ் விழாக்கள் நடத்தி வருவதையும் அறிந்து நான் மகிழ்வதுண்டு. பிரான்சிலிருந்து புதுசேரிக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு அவர்களின் தமிழ்ப்பணிகளுக்கு என் வாழ்த்தினை அவ்வப்பொழுது தெரிவிப்பது உண்டு. 

பிரான்சில் வாழும் திரு. கி. பாரதிதாசன் அவர்கள் திருக்குறளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் திருக்குறள் அரங்கம் என்ற பெயரில் மாதந்தோறும் திருக்குறள் சார்ந்த நிகழ்வினை நடத்தி வருகின்றார். அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி எடுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பிரான்சு நாட்டில் தமிழ் வளர்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பயன் நல்கும். இத்தகு முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். திருக்குறள் அரங்கம் தொடர்ந்து தமிழ்மறை பரப்பட்டும்.

குறள் அரங்கம் நடைபெறும் நாள்: 30.03.2013(சனிக்கிழமை)
இடம்: கி.பாரதிதாசன்-குணசுந்தரி இணையர் இல்லம், பிரான்சு

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகிறேன்...

Unknown சொன்னது…

தமிழ்மறையை உலகெங்கும் பரப்பும் அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

விழித்துக்கொள் சொன்னது…

தமிழ்மறையை உலகெங்கும் பரப்பும் அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
surendran

கவியாழி சொன்னது…

நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.அதுவும் கவிஞர்.பாரதிதாசனின் கவிமழை எப்போதும் என்னை நனையச் செய்யும்