நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 11 மார்ச், 2013

கோவை டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது…


கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(11.03.2013) காலை 10 மணிக்குத் தொடங்கியது. சற்றொப்ப முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாகக் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பான்மையாகக் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

 டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் கம்பர் அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியது.

மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்களின் தலைமையில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.
பேராசிரியர் கி. மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
முனைவர் . டி. புவனேஷ்வரன், முனைவர் வெ. இராமகிருஷ்ணன், முனைவர் கி. துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து உரையாற்றுகின்றார்.

கருத்துகள் இல்லை: