திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூய சேவியர் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல்(FRRC) துறையில் அடித்தள மக்களின் உலகநோக்கு (Worldview of Subaltern People) என்னும் பொருளில் நாட்டுப்புறவியல் பயிலரங்கம் 2012 ஆகத்து மாதம் 6 முதல் 11 வரையில் ஆறுநாட்களுக்கு நடைபெறுகின்றது.
இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டம் பயில்கின்ற ஆய்வு மாணவர்களும் ஆர்வலர்களும் இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் சிறப்புரை, நெறியாளர் உரை, ஆவணப்படத் திரையீடு, குழுவிவாதம், வாசிப்பு, களப்பணி, ஆய்வுரை தயாரித்துப் பார்வையாளர் முன் வழங்குதல் என்று பயனுடைய முறையில் இந்தப் பயிலரங்கு நடைபெற உள்ளது.
பயிலரங்கக் கட்டணம்: ஆறு நாட்களுக்கும் உறைவிடம், பகலுணவு, தேநீர், ஆய்வுத்தாள்கள் ஆகியவற்றுக்கு
மொத்தக்கட்டணம் : உருவா: 900
உறைவிடம் தேவையற்றவர்களுக்குக் கட்டணம் உருவா : 600
பதிவுசெய்துகொள்ள கடைசிநாள் 04.08.2012
தொடர்புக்கு:
இயக்குநர்,
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்,
தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை-627 002
திருநெல்வேலி மாவட்டம்
தொலைபேசி எண் 0462-2561932, 2560804
பேராசிரியர் ஆ.தனஞ்செயன் - 9486041862
1 கருத்து:
நல்ல தொரு முயற்சி தகவலுக்கு நன்றிகள்.
கருத்துரையிடுக