நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 11 ஆகஸ்ட், 2012

பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி - 2012, இலக்கியப் போட்டிகள்




புதுச்சேரியில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி, பொது மக்களுக்கான இலக்கியப் போட்டியைப் புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கம் நடத்துகின்றது. ஆர்வமுடைய அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 19-31-12-2012,
இடம்: வேல்.சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி.

போட்டிகளின் விவரம்
1. கட்டுரைப் போட்டி
2. கவிதைப் போட்டி
3. பேச்சுப் போட்டி
4. பாட்டுப் போட்டி
5. கருவியிசை
6. நாட்டுப்புற நடனம்
7. ஓவியப் போட்டி

போட்டியில் கலந்துகொள்வோர் வகைப்பாடு:

1. தொழிற்படிப்புகள் & தொழில்நுட்பப் படிப்புகள்
2. கல்லூரி நிலை
3. மேல்நிலைக்கல்வி (11,12 ஆம் வகுப்பு)
4. உயர்நிலை (9,10 ஆம் வகுப்பு)
5. நடுநிலை (6 முதல் 8 ஆம் வகுப்பு)
6. தொடக்கநிலை (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை)
7. மழலையர் வகுப்பு

பரிசு விவரம்:

ஒவ்வொரு வகைப் போட்டியிலும் முதலிடம் பெறுவோருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பெறும்.

முதல் பரிசு: 500 உரூபாய் மதிப்புள்ள நூல்கள்
இரண்டாம் பரிசு: 300 உரூபாய் மதிப்புள்ள நூல்கள்
ஆறுதல் பரிசு(இருவருக்கு): உரூபாய் 100 மதிப்புள்ள நூல்கள்


பொதுப்போட்டியாக வினாடி வினாப் போட்டி நடைபெறும்

கலந்துகொள்வோர் கவனத்திற்கு:

முதற்கட்டமாக ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு போட்டிக்கும் 50 பேர் வரை பங்கேற்கச் செய்யலாம். இதில் மூன்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பட்டியலைப் படைப்புகளுடன் அனுப்ப வேண்டும். இந்த முதற்கட்டப் போட்டிகள் 15.09.2012 முன்பாக அந்தந்த நிறுவனங்களில் நடத்தப்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பெறும் மாணவர்களின் பட்டியல் அவர்களின் படைப்புகள், ஆக்கங்கள் யாவும் 30.09.2012 மாலை 5 மணிக்கு முன்னதாகப் புதுச்சேரி புத்தக எழுத்தாளர் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். காலம் கடந்து வரும் படைப்புகள் ஏற்பதற்கில்லை. கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு.

தொடர்புக்கு:

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கம்
எண் 17, 14 ஆம் தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி- 605 008
மின்னஞ்சல்: puduwriters@gmail.com

கருத்துகள் இல்லை: