நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 டிசம்பர், 2010

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் மறைவு


கலாநிதி ஈழத்துப்பூராடனார்(13.12.1928-20.12.2010)

என் பதினேழு ஆண்டு கால நண்பரும், தந்தையார் நிலையிலிருந்து என் குடும்பத்துக்கு ஆறுதல் மொழிகளும் தேறுதல் உதவிகளும் செய்துவந்தவருமான கலாநிதி ஈழத்துப்பூராடனார் என்னும்
தமிழ்ச்சான்றோர் 20.12.2010 இல் கனடாவில் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கனடாவிலிருந்து என் உடன்பிறப்பு செந்தி அவர்கள் செல்பேசியில் இப்பொழுது அறிவிக்க அதிர்ந்துபோனேன். நானும் என் குடும்பத்தினரும் ஆறாத்துன்பத்தில் உள்ளோம். கையற்றுக் கலங்கும் ஈழத்துப்பூராடனார் குடும்பத்தினருக்கும் பன்னாட்டில் வாழும் அவரின் தமிழ் வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

3 கருத்துகள்:

nayanan சொன்னது…

முதிர்ந்த பேரறிஞர் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
தமிழ் உலகிற்குப் பெரிய இழப்பு.
அவரைப் பிரிந்து வாடும் அவரின் இல்லத்தினர்க்கும் தங்களுக்கும் இறைவன் ஆறுதல் அளிக்கட்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

ம.தி.சுதா சொன்னது…

ஐயாவுக்கு என் இரங்கலும் சேரட்டும்...

உமர் | Umar சொன்னது…

தமிழ்ப்பேரறிஞரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.