நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 15 டிசம்பர், 2010

உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு

சென்னையில் உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 16,17-12.2010 ஆகிய இருநாள்களில் நடைபெறுகின்றது.

சென்னை லீ இராயல் மெரிடியன் உணவகம் அரங்கில் சொ.சகாதேவன் தலைமையில் தொடக்க விழா நடைபெறுகின்றது.

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மாநாட்டு ஒருங்கிணைப் பாளருமான சு. ஈசுவரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

மாநாட்டு அறிக்கையினை ந.அரங்கராசன் வழங்க, மாநாட்டின் நோக்கங்களை முனைவர் இரா. இளவரசு எடுத்துரைத்து உரையாற்றுவார்.

முன்னைப் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பரமசிவம் அவர்கள் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகின்றார். சென்னைப் பல்கலைக்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் மாநாட்டு மலரினை வெளியிட்டுத் தொடக்கவுரையாற்றுகின்றார். பாவலர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புரையாற்றுகின்றார்.

மூர்த்தி அவர்களின் நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவுறும். அதன் பிறகு அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்குவர்.

17.12.2010 மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்குநர் ப. மணி அவர்கள் அன்னை பெரி.கனரஞ்சிதம் நினைவு விருது வழங்கி நிறைவுரையாற்றுகின்றார்.

கருத்துகள் இல்லை: