வெள்ளி, 27 நவம்பர், 2009
பாவலர் மாநி(மார்கிரேட் நிக்கோலசு)
பாவலர் மாநி
புதுவையில் வாழும் பாவலர்களுள் பாவலர் மாநி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.மரபுப்பாடல் எழுதும் பெண்பாவலர்களுள் குறிப்பிடத்தக்கவர்.முனைவர் இரா.திருமுருகன்,பாட்டறிஞர் புலவர் இலக்கியன்,புலவர் நாகி உள்ளிட்டவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக எழுதி வருபவர். இதுவரை துளியாய், தூறலாய்,புயலாய்,பூவாய்,பூங்காற்றாய்,புனலாய்,சுருக்குப்பை(துளிப்பா),பாவம் அவள்(சிறுகதை)உதிரிப்பூக்கள்(சிறுகதை),மரபுச்சாரல்,மழைச்சாரல் உள்ளிட்ட நூல்களை வழங்கியுள்ளார்.குறளாயிரம்,வண்ணத்துப்பூச்சிகள்(சிறுவர் பாடல்கள்) விரைவில் வெளிவர உள்ளன.
பாவலர் மாநி அவர்கள் சேலத்தில் 26.12.1948 இல் பிறந்தவர்.இளம் அறிவியல் படிப்பைக் கோவை நிர்மலா கல்லூரியில் படித்தவர்.கல்வியியல் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்.கிறித்தவப் பெண்கள் அமைப்புகளில் பலநிலைகளில் பணிபுரிந்தவர்.திராவிட இயக்கக்கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.இவர் கணவர் திரு.நிக்கோலசு அவர்கள் புதுச்சேரியில் சிறைத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல் எழுதுபவர்கள் குறைந்து வரும் இந்த வேளையில் அம்மா மாநி அவர்களின் பாட்டுப்பயணம் தொடர வாழ்த்துவோம்.
பாவலர் மாநி அவர்களின் முகவரி:
பாவலர் மாநி
141,இலப்போர்த் தெரு,
புதுச்சேரி- 605 001
செல்பேசி: 9787095578
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
பாவலர் மாநி பற்றிய அறிமுகம் நான்று.பலருக்கு அறிமுகமாவார்
வணக்கம் ஐயா, மரபுக் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களது இணைய வழியிலான சேவை தமிழுக்கு இப்போது அவசியத் தேவை.
எம். மணிகண்டன்
கருத்துரையிடுக