நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் திருக்குறள் விழா இனிதே தொடங்கியது!

அந்தமான் தமிழர் சங்கமும் சென்னைவி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்கமும் இணைந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் மூன்றுநாள் திருக்குறள் மாநாடு,திருவள்ளுவர் சிலைத்திறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. இன்று 06.11.2009 அந்தமானில் தொடக்கவிழா நடந்தது.

தமிழகத்திலிருந்து பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் பனை வாரியத்தலைவர் குமரி அனந்தன்,தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஔவை.நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வி.ஜி.செல்வராஜ்,மருதவாணன்,போசராசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ப்புத்தகங்கள் 8 ஆம் வகுப்பு பாடநூல்கள் வரை தமிழகத்திலிருந்து வருகின்றன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று தமிழக அரசு புத்தகங்களை அனுப்புகின்றது.
தமிழர்கள் பலருக்கு வீட்டுமனை இன்றும் இல்லை.

தென்னஞ்சோலையாக,வயல்களாக,கரும்புத்தோட்டமாக மாற்றியுள்ளனர்
விமானம் நிலையத்திற்கு நிலம் எடுக்க தமிழர்கள் நிலம் எடுக்கப்பட உள்ளன.
அந்தமானில் தமிழ் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உள்ளனர்.அவர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும்.
தமிழில் படிக்க முன்பு வாய்ப்பு இல்லை.தமிழ்க்கல்வி வேண்டி தீக்குளிப்போம் என்று போராடினர்.பிறகு வெற்றி கிடைத்தது.
அந்தமானுக்குத் தமிழர் ஆளுநராக ரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழர் பண்பாடு வளரத் தமிழர்கள் ஆளுநராக வர வேண்டும் என்று உரையாற்றினர்..

மனோகரன்-தமிழாசிரியர்
அ.நி.தீவுகளில் பல இன மக்கள் வாழ்கின்றனர்.
எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றார்.

சென்பகராசா-வாழ்த்துரை

ஔவை.நடராசன் பேச்சு
தமிழ் ஒலிக்கமுடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்லூரி.அதில் தமிழ் வளர்த்தவர்உலக நாயகி.
தாய் தன் மகனைப் பார்க்கும்பொழுதெல்லாம் இளைத்துள்ளாய் என்பாள்.
அதுபோல் பலரும் தமிழ் வளரவில்லை என்கின்றனர்.ஆனால் கணிப்பொறி உலகில் தமிழ் நன்கு வளர்ந்துள்ளது என்றார்.
அந்தமான்தமிழ்ச்சங்கம் பல்வேறு தமிழ்ப்பணிகளைச்செய்து வருகிறது.
தமிழக அரசு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை உருவாக்கித்தில் உதவியது.வெளிநாட்டுக்கு அனுப்பும்பாட நூல்களில் சிக்கல் என்ன என்றால் தமிழக அமைப்பு அதில் சொல்லப்பட்டிருகும்.அந்தமான் குழந்தைகள் இது பற்றி அறியமாட்டார்கள்.
தமிழ்ப்பாட நூல்களைப் பயன்கொள்ள சிக்கல் உள்ளது.

முரண்பாடு இல்லாமல் நம் கருத்துகளை முன்வைத்து வெல்வது இன்று தேவை. சொற்களுக்குப் பொருள் காண்பதில் பலர் தவறு செய்கின்றனர்.பெரியார் கருப்புச்சட்டைப் போராட்டம் என்றார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் தவறாகப்புரிந்து எழுதினார்
மனைவி உணவு உண்ண அழைக்க செல்லவில்லை என்றால் அதனையே பெரும்போராட்டம் என்பர்.

தமிழில் புறம்,அகம்,திருக்குறள்,சங்க இலக்கியப்புகழ் உள்ளது எனப்பேசி பயன் இல்லை 40 உறுப்பினர்கள் இருந்த்தால் ஆனது.தமிழ் மக்கள் உயர்ந்தால் தமிழ் உயரும்.

காந்தி கூற்று= இந்தியாவில் உள்ளவர்கள் எழுந்து நின்று துப்பினால் இங்கிலாந்து மிதக்கும் என்பார்.
ஆங்கிலேயன் கற்பனையில் மிதக்கமாட்டான்,ஒற்றுமையுடையவன் வாழ்வான்.தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் மேன்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.நலத்தால் ஓங்க வேண்டும்.வளத்தால் ஓங்க வேண்டும்கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் வளர்ந்துள்ளது.
கடற்கரை என்றால் நண்டும் கிடக்கும்.நாற்றம் இருக்கும்.ஆனால் வி.ஜி.பி.மிகப்பெரிய தூய்மை இடத்தைப் பராமரிக்கின்றனர்.இதுவி.ஜி,பியின் பெருமை இல்லை.தமிழன் பெருமை.
தமிழ் என்றால் இனிமையான வாழ்க்கை என்று பொருள்.

குறிஞ்சிப்பாட்டு இப்பாடல் என்னுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று என்று கூறுவதிலிருந்து தமிழின் சிறப்பை உணரலாம்.இனிமை என்றால் தமிழ் என்று பொருள்.போர் என்றால் தமிழ். குடும்பம் என்றால் தமிழ்.காதல் என்றால் தமிழ்.இன்னிசையால் தமிழ் பரப்பியவன் தமிழன்.இனம் வளர்ந்தால் மொழி வளரும் பிள்ளைகள் வளர தாய்ப்பால்தான் தேவை.
ஆவின்பால் காய்ச்சிய பால்தான் நல்லது.
தாய்ப்பால் குடிக்க மறந்த தமிழனை முன்னேற்றத் தனித்தமிழ் இயக்கம் வளர்ந்தது.

இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது. உலகில் தமிழர்கள் இதனைநன்கு உணர வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் அரசன்,சமய வாணர்கள் சொன்னால் யாரும் மறுக்கக்கூடாது அக்கால இயல்பு.வள்ளுவர் எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் என்றார் திருவள்ளுவர் கூறிய கருத்துகளைச் சாக்ரடிசும் சொல்லவில்லை.பிறப்பு ஒக்கும் என்றவர் திருவள்ளுவர். உழைப்பவனுக்குக்கல்வி வராது என்ற காலத்தில் சொன்ன கருத்து இது.வேதங்கள் அதிர்ந்தன.
கல்வியைக் கண்ணென்ப வாழும்உயிருக்கு என்றார் வள்ளுவர்

காலத்தால் பழைமையும் கருத்தால் புதுமையும் உடையது திருக்குறள் என்றார் ஔவை.நடராசன்.

தலைமையுரை
வி.ஜி.சந்தோஷம்
6 அடி உயர சிலை அந்தமான் தமிழர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது
இதுவரை உலகம் முழுவதும் 8 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.வள்ளுவரின் புகழ் பரப்ப வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.அதனால் இப்பணி தொடர்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை: