நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 ஜனவரி, 2009

குறிஞ்சிமலர் பார்க்காதவர்களுக்கு...


பூத்துக்குலுங்கும் குறிஞ்சிமலர்,வரையாடுகள்,மூனாறு மலைப்பகுதி

சங்க நூல்களில் குறிஞ்சிமலர் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூப்பது என்று பரவலாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.குறிஞ்சிமலர் அதிகம் பூத்தால் வறட்சி ஏற்படும் எனப் படுகமொழியில் ஒரு பழமொழி உண்டு.குறிஞ்சிமலர் பூத்துள்ள இடத்துக்கு அருகில் ஆணும் பெண்ணும் நின்றால் இன்ப உணர்வுகள் பெருகுமாம்.பாலுறவு வேட்கை மிகுமாம்.

அண்மையில், என்னுடன் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் வாழ்த்தட்டை ஒன்று வழங்கினார்.மூனாறு பகுதியில் உள்ள மலையின் பின்புலத்துடன் வரையாட்டுடன் கூடிய குறிஞ்சிமலர் காட்சி அஃது.கண்டு மகிழுங்கள்.

(மூனாறு= மூன்று ஆறு.நல்லதண்ணி தோட்டம்(எசுடேட்),பெரியவர் தோட்டம்(எசுடேட்),மாட்டுப்பட்டித்தேட்டம்(எசுடேட்) என்ற மூன்று தோட்டப்பகுதியிலிருந்து வரும் ஆறுகள் ஒன்றாகக் கலக்கும் இடம் மூனாறு.இவ்வாறு ஒன்றாகக் கலக்கும் தண்ணீர் சொக்கநாடு தேக்கம்வரை ஒன்றாகச்செல்லுமாம்.மேலும் விவரம் தெரிந்தவர்கள் எழுதலாம்)

படம் வெளியிட்ட நிறுவனத்துக்கு நன்றி

3 கருத்துகள்:

தமிழ் குமரன் சொன்னது…

வணக்கம்.
தற்செயலாக தங்களின் வலைப்பூவில் உலா வரும் வாய்ப்புக் கிட்டியது. அதன் வழி குறிஞ்சி மலர்களை நுகரும் வாய்ப்பும் கிடைத்தது.
மிக்க நன்றி ஐயா..

தமிழ் குமரன்,
கெடா, மலேசியா.
tamilan66@gmail.com

Unknown சொன்னது…

It is a nice photography by a researcher but not by a good photographer. Anyhow, I made it as my desktop image. With thanks

மாதேவி சொன்னது…

குறிஞ்சி மலர்களைப் பாரத்ததில்லை. முன்பொருமுறை ஒரு செடியை மட்டும் பார்க்கக் கிடைத்தது. இத்தனை அழகா என வியக்க வைக்கிறது. பதிவிட்டதற்கு நன்றிகள்