வியாழன், 1 ஜனவரி, 2009
திருவள்ளுவர் விருது பெறும் மொழியியல் அறிஞர் பொற்கோவுக்கு வாழ்த்துகள்.
முனைவர் பொற்கோ
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது இந்த ஆண்டு(2008) சென்னைப் பல்கல்லைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ ஐயா அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இவர் மொழியியல் ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவர். அயல்நாட்டு மாணவர்கள் பலருக்குத் தமிழ்மொழி,இலக்கியம் கற்பித்த பெருமைக்கு உரியவர். உலக மொழியியல் வல்லுநர்களால் மதிக்கப்படுபவர்.
தமிழ் இலக்கணம்,இலக்கியம்,நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பல துறையறிவு பெற்றவர்.சப்பான் மொழிக்கும் தமிழுக்கும் உறவு உள்ளமையை அறிஞர் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து மெய்ப்பித்தவர்."இக்கால இலக்கணம்" இவர் வழங்கிய தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத் தகுந்தது. திருக்குறளுக்கு இவர் வழங்கிய உரை ஆழமானது.
அன்னாரின் தமிழ்ப்பணியை மதிக்கும் வகையில் திருவள்ளுவர் விருதைத் தமிழக அரசு வழங்க உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.முனைவர் பொற்கோ அவர்களைப் புத்தாண்டில் வணங்கி வாழ்த்துகிறேன்.
அறிஞர் பொற்கோ பற்றி முன்பும் என் பதிவில் செய்திகள் உள்ளன.காண்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
திருவள்ளுவர் விருது பெறும் மதிப்புமிகு முனைவர் ஐயா பொற்கோ அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தைக் கூற விழைகிறேன்.
முனைவர் ஐயா தமிழ்மொழிக்கும் இலக்கணத்திற்கும் இன்னும் சீர்மிகு பணிகளை ஆற்றவேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைமை அவருக்கு நிலையான நலத்தையும் நீடித்த வாழ்நாளையும் வழங்கிட வேண்டுமாய் இறைஞ்சுகிறேன்.
முனைவர் ஐயா பொற்கோ அவர்களின் இலக்கண விளக்க நூல்கள் மலேசியாவின் உயர்க்கல்வி மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பெரும் துணையாக இருந்து வருகின்றன.
கருத்துரையிடுக