நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 17 ஜனவரி, 2009

செக்நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இயற்கை எய்தினார்!


அறிஞர் கமில் சுவலபில்

செக்கோசுலேவியா நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் இன்று 17.01.2009 இயற்கை எய்திய செய்தியை அவர் துணைவியார் நினா சுவலபில் அம்மா அவர்கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் மொழியியல்,தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமில் சுவலபில் அவர்களைப் பற்றித் தமிழ் ஓசையில்(16.11.2008) அயலகத் தமிழறிஞர்கள் வரிசையில் நான் எழுதியிருந்தேன்.என் பதிவிலும் தகவல் உள்ளது.அவர் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

நினா சுவலபில் அவர்களின் மடல்
Dear DR,Elangovan

Dear dr, Elongovan, I just want to inform you that my husband Kamil Zvelebil died 17th of January yours N. Zvelebil.

4 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

உலகத் தமிழறிஞர்கள் பலர் தமிழுக்கு உழைத்துள்ளனர்.அவர்களில் முதன்மையானோரில் ஒருவர் அறிஞர் கமில் சுவெல்லபிள் ஆவார்.
அவருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மாட்சிமைப் பரிசு தர பல் ஆண்டுகட்கு முன்னர் அழைத்தோம்.
உடல்நிலை அங்கு வரத் தாங்காது,ஆனால் பிரான்சின் சிறு கிராமத்தில் இருந்து கொண்டு தமிழ்ப்பணிதான் செய்து வருகிறேன் என்று மகிழ்வுடன் பேசினார்.
அவரது தமிழ்ப்பணியை பாராட்டுவோம்,வாழ்த்துவோம்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவெல்லபிள் அவர்களின் மறைவினால் தமிழ்க்கூறு நல்லுலகம் மற்றொரு இழப்பினைச் சந்தித்துள்ளது.

இருந்தாலும், தமிழுக்கு அன்னார் அளித்துள்ள கொடைகள் என்றென்றும் நன்றியோடு நினைவுக்கூரப்படும். அன்னாரின் எழுத்துகள் வருங்காலத் தமிழர்களுக்கும் உதவியாக அமையும் என்பது உண்மை.

அன்னாரின் ஆதன் அமைதிபெற அன்போடு இறைமையை இறைஞ்சுகிறேன்.

மலேசிய மண்ணிலிருக்கும் தமிழ்ப்பற்றாளர்கள் சார்பில் அன்னாரின் அன்புக்குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்களைத் தெரிவிக்கின்றேன்.

கோவி.மதிவரன் சொன்னது…

அன்னாரின் இறப்பு தமிழ்க்கூறு நல்லுலகத்திற்கு இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

ஐயா,

அறிஞர் கமில் சுவெல்லபிள் அவர்களின் இறப்புச் செய்தியும் அன்னாரைப் பற்றி தாங்கள் எழுதிய வரலாறும் மலேசிய நாளிதழில் (மக்கள் ஓசை 21.1.2009) வெளிவந்தது.

நமது நண்பர் வழியாக இதனை ஏற்பாடு செய்தேன்.

தங்கள் மேலான கவனத்திற்கு இதனை அறிவிக்கின்றேன்.