நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 மார்ச், 2012

பொன்னி பாரதிதாசன் பரம்பரை


பொன்னி பாரதிதாசன் பரம்பரை

 பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் பொன்னி இலக்கிய இதழ் ஒரு தொடரை 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோர் 25 வரை வெளியிட்டது. அந்தத் தொடரில் இடம்பெற்ற பாவலர்களை என் முனைவர் பட்ட ஆய்வில் அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை ஆய்வுசெய்து வெளியிட்டேன். அத்தொடரில் இடம்பெற்ற பாவலர்களின் பட்டியல் இதோ:

1.அண்ணாமலை. மு 1947, பிப்ரவரி
2.நாச்சியப்பன். நாரா, 1947,மார்ச்சு
3.சுரதா 1947,ஏப்ரல்
4.புத்தனேரி ரா.சுப்பிரமணியன் 1947, மே
5.முத்தையா, இராம.நாக, 1947,சூன்
6.முடியரசன் 1947, சூலை
7.சேதுராமன், இராம.வே1947,ஆகத்து
8.வாணிதாசன் 1947,செப்டம்பர்
9.இராமசாமி, சி. 1947, அக்டோபர்
10.பழனியப்பன், சாமி. 1947, நவம்பர்
11.இராமநாதன், அண 1947,டிசம்பர்
12.கோவை இளஞ்சேரன் 1947,சனவரி
13.தமிழரசன்(மாணிக்கம்,சி) 1948, பிப்ரவரி
14.தேவர் கே.டி 1948,மார்ச்சு
15.நமச்சிவாயம், நா.கி 1948,மே
16.குழூத்தலைவன்(இரா.கணபதி),1948, மே
17.திரவியம்,கு (ரவி), 1948,சூன்
18.வழித்துணைராமன்,சு. 1948, சூலை
19.ரங்கதுரைவேலன், 1948,சூலை
20.குலோத்துங்கன்,வா.செ. 1948,ஆகத்து,1
21.கிருஷ்ணசாமி,டிகே. 1948,ஆகத்து 15
22.குருசாமி,வெ 1948,செப்டம்பர் 1
23.சண்முகம்.வே.1948, செப்டம்பர் 15
24.நாகப்பன்,பெ. 1948, அக்டோபர்,10
25.சுந்தரராசன்.தண. 1948, அக்டோபர்,30
26.சிவனடியான்.பெரி 1948,நவம்பர் 10,
27.சிவப்பிரகாசம்,எஸ், 1948,நவம்பர் 25
28.சீனிவாசன் சி.அ. 1948,டிசம்பர் 10
29.ரெங்கநாதன் மு. 1948,டிசம்பர் 25
30.பொன்னையா,ஜே.எஸ். 1949, சனவரி 25
31.சுந்தரம்,கதி. 1949,பிப்ரவரி10
32.மணி.எம்.எஸ். 1949,பிப்ரவரி 25
33.கணேசன், நா 1949,மார்ச்சு 10
34.அரசமணி. தி 1949,மார்ச்சு 25
35.சண்முகசுந்தரம், ப. 1949,ஏப்ரல் 10
36.பரமசிவன், க. 1949,ஏப்ரல் 25
37.மாவண்ணா தேவராசன் 1949,மே,10
38.அண்ணாமலை, வே. 1949மே,25
39.குமாரசாமி, மா 1948,சூன்10
40.முத்துசாமி, ப. 1949,சூன் 25
41.ஷரிப் 1949,சூலை 10
42.சுப்பு ஆறுமுகம் 1949,சூலை 25
43.திருநாவுக்கரசு, சி. 1949,ஆகத்து 10
44.சீத்தாராமன்,ச.(சீராளன்) 1949,ஆகத்து 25
45.ஜெயராமன் தெ. 1949, செப்டம்பர் 10
46.மாணிக்கவாசகன், ஞா 1949,செப்டம்பர் 25
47.மனோகரன், கி. 1949, அக்டோபர் 10
48.இராமநாதன், எஸ்.எம். 1949,அக்டோபர் 25

நூல்: பொன்னி பாரதிதாசன் பரம்பரை
ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

பதிப்பகம் முகவரி:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கை கொண்டசோழபுரம் (வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம் - 612 901
+ 9442029053

விலை: 50 உருவா
பக்கம்: 160

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா வணக்கம்.
நான் கல்லூரியில் படித்த போது (1974-78) “பாரதி தாசன் பரம்பரையில் நான்” எனும் தலைப்பில் கவிதைப் போட்டி வைத்தார்கள். நானும் கலந்து கொண்டு முதல்பரிசு வாங்கிய கவிதையின் கடைசி வரி இப்படி முடியும்... “பாவேந்தன் பாட்டுப் பரம்பரை நா.முத்துப் பாற்கரனே” (எனது இயற்பெயர் அது. பாவகை கட்டளைக் கலித்துறை)
ஆனால் இத்தனை ஆண்டுகள் கழிந்தாவது தங்கள் அறிமுகம் கிடைத்ததே என்று மகிழ்கிறேன்...
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை.