நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 28 மார்ச், 2012

மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்


மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்

நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது(1992) அயலவர் ஆட்சியில் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழகம் என்னும் பொதுத்தலைப்பில் ஆய்வு செய்யும்படி பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் ஆய்வு மாணவர்களாகிய எங்களை அறிவுறுத்தினார்கள். எனக்கு நெறியாளராக முனைவர் இளமதி சானகிராமன் அவர்கள் அமைந்தார்கள்.

நான் மராட்டியர்கள் காலத்தில் தமிழக நிலை எவ்வாறு இருந்தது என்று ஆய்வு செய்தேன். அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வேடு மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது(11.12.1994).

முதல் இயல் மராட்டியர் காலத் தமிழகம் எனவும் இரண்டாம் இயல் மராட்டியர் காலத் தமிழ் இலக்கியம் எனவும், மூன்றாம் இயல் மராட்டியர் காலத் தமிழ் எனவும் நூலின் தலைப்புகளைக் கொண்டுள்ளது.

இந்த நூலில் தமிழில் கலந்துள்ள மராட்டிய மொழிச்சொற்கள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இந்த நூல் அச்சுவடிவம் பெறுவதற்குப் புலவர் த.கோவேந்தன் அவர்கள் உதவியாக இருந்தார்கள்.

வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901

பக்கம் 136
விலை 25

கருத்துகள் இல்லை: