பழையன புகுதலும்
நான் பல்வேறு கருத்தரங்குகளுக்கு எழுதிய கட்டுரைகள் பழையன புகுதலும் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு நூல்வடிவம் கண்டுள்ளது(2002). அண்ணன் வே.இளங்கோ அவர்கள்(அடவி வரைகலை, சென்னை) இந்த நூலை உருவாக்கினார்கள். ஓவியர் புகழேந்தியின் அட்டைப்படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. இந்த நூலை அச்சிடும்பொழுது நான் ஆர்க்காட்டில் தங்கியிருந்தேன். ஒரு பதிப்பாளரை நம்பி முன்தொகை அளித்து, நூலை அச்சிட வழங்கினேன். அவரோ பல முறை அலையவிட்டு மட்டமான தாளில் அச்சிட்டு வழங்கினார்.
பதிப்புநிலையில் மிகச்சிறந்த நண்பர்கள் பலர் கிடைத்தனர். அவர்களுள் அண்ணன் வே.இளங்கோ அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இன்னொரு நண்பர் திரு.தேவநேயன் அவர்கள் சென்னையில் திரு. மறைமணி அவர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் மறைமணி அவர்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த அண்ணன் வே.இளங்கோ அவர்களின் நட்புகிடைத்தது.
வே.இளங்கோ அவர்கள் கல்பாக்கம் வேம்பையன் ஐயா அவர்களின் திருமகனார் என்பது கூடுதல் சிறப்பு. இளங்கோ அவர்கள் பழகுதற்கினிய பண்பாளர். என் நூல் உருவாக்கத்திற்கு உதவிய அவர் பெற்றதைவிட, என்னிடம் இழந்ததே அதிகமாக இருக்கும். நிறைவில் உடன்பிறப்புகளாக வாழ்கின்றோம். இது நிற்க.
1. அயலகத் தமிழ்
2. பழையன புகுதலும் புதியன கழிதலும்
3. கன்னங்குடா உழுதொழிற்பள்ளு
4. சீட்டுக்கவி
5. டேப் கலைஞர் குடந்தை குருசாமிதாசு
6. பாப்பாத்தியம்மன் வழிபாடு
7. தெவம்
8. திருவள்ளுவரின் நட்பு
9. இலக்கணத்தைக் கற்பிக்க எளிய வழிகள்
10. தெருக்கூத்துக் கலைஞர் கலவை குமாரசாமி
என்னும் தலைப்புகளைக் கொண்ட கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்)
கங்கைகொண்டசோழபுரம்(வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம்-612 901
பக்கம் 112
விலை 40
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக