
முனைவர் மு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் சான்றிதழ் வழங்கும் காட்சி.அருகில் முத்து.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்பு இன்று(31.07.2011) நடைபெற்றது. எழுத்தாளர் அருணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் நினைவுத் தமிழ் இலக்கியப் பரிசைப் புதுச்சேரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வழங்கினர்.
எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள், டி.செல்வராஜ்,ச.சுப்புராவ், சந்திராமனோகரன், நிழல்வண்ணன், நாணற்காடன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் பரிசுபெற்றனர்.எழுத்தாளர்கள் கமலாலயன், சைதை ஜெ, மயிலை பாலு, கி.அன்பரசன், ச.விசயலட்சுமி,முத்து, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் நூல்கள் பற்றி கருத்துரையாற்றினர். படைப்பாளிகள் ஏற்புரையாற்றினர்.

பரிசுபெற்ற படைப்பாளிகள், த.மு.எ.க.சங்கத்தின் பொறுப்பாளர்கள்

மு.இளங்கோவனுக்கு எழுத்தாளர் அருணன் பரிசுத்தொகை வழங்குதல்

பரிசுபெறும் மு.இளங்கோவன் அருகில் அருணன், ச.தமிழ்ச்செல்வன்
1 கருத்து:
வாழ்த்துக்கள் அய்யா...!
கருத்துரையிடுக