சனி, 17 அக்டோபர், 2009
அகவிழி ஆவணப்படம் புதுச்சேரியில் வெளியீட்டு விழா
இடம்: அல்லயன்சு பிரான்சீசு அரங்கம்,சுய்ப்ரேன் வீதி,புதுச்சேரி-605 001.
நாள்: 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.00 மணி
புதுவையின் புகழ்பெற்ற இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களின் இயக்கத்திலும்,புதுவை இளவேனிலின் ஒளி ஓவியத்திலும் உருவாகியுள்ள அகவிழி என்னும் ஆவணப்படம் தமிழகத்தின் கடைக்கோடிப்பகுதியில் இருக்கும் இராமநாதபுரத்தின் வெள்ளரி ஓடை கிராமத்தில் பனைத்தொழில் புரியும் முருகாண்டி என்ற பார்வையிழந்த மனிதரின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது.இயல்பிலேயே பார்வையிழந்த முருகாண்டிப் பனைமரமேறித் தொழில் செய்வதை மிகச்சிறப்பாகப் பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 24.10.2009 இல் புதுவையில் வெளியிடப்பட உள்ளது.
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவைச் சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் அகவிழி குறுந்தகட்டை வெளியிடுகிறார்.எழுத்தாளர் இரவிக்குமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.புதுவைக் காவல்துறையின் முதுநிலைக் கண்காணிப்பாளர் சிறீகாந்து அவர்கள் முதன்மையுரை ஆற்றுகிறார்.மேலும், நிழல் இதழாசிரியர் ப.திருநாவுக்கரசு(சென்னை) சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்தப் படத்தில் சிற்பி செயராமன் அவர்கள் குரல்கொடுத்துள்ளார்.சே.கே.அவர்கள் ஆங்கில உரை வழங்கியுள்ளார்.இரா.ச.முருகேசபாரதி அவர்கள் வரைகலைப் பணியையும் படத்தொகுப்பினைச் ச.மணிகண்டனும்,ஒளி ஓவியத்தைப் புதுவை இளவேனிலும் மேற்கொண்டுள்ளனர்.ஆக்கத்தில் உதவியவர் சரவணன் அவர்கள் ஆவார்.
அகவிழி படக்குழுவினர் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
தொடர்புக்கு:
+91 9894660669
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக