நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா!

அண்மையில் நான் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 30.10.2009 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

நாட்டுப்புறப்பாடல்கள்,தமிழிசைப்பாடல்களுடன் தொடக்கத்தில் இசையரங்கு நடைபெறும்.

6.30 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறும்.கல்வியாளர்கள்,இணைய அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் விழாவாக இது அமைகிறது.இந்நிகழ்வு பற்றிய மேலதிக விவரங்கள்,அழைப்பிதழ் நாளை வெளியிடப்பெறும்.

1 கருத்து:

சுந்தரா சொன்னது…

நூல் வெளியீட்டுவிழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்!