நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் திருத்தப்பட்டு,விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 2010 பிப்ரவரியில் வெளியீடு!

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு,01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன.பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில்வெளியிடப்பட உள்ளன.முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு.

தெமி 1/ 8 அளவிலான,20 தொகுதிகளைக்கொண்ட(20 Volumes ) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது.இத்தொகுப்பு உயரிய,அழகிய,தரமான பதிப்பாக அமைகிறது.100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு,சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி,இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.

நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும்.

ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.

முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.

இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும்,இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர்(Bank Draft)

PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து,தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19,முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005,இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

மின்னஞ்சல் முகவரி:
sinthaniyalan@yahoo.in
periyar_era@yahoo.in

2 கருத்துகள்:

மாநிலத்தமிழ்ச்சங்கம் சொன்னது…

நல்ல செய்தி! நன்றி!

- முத்து

Unknown சொன்னது…

முண்டம் முனைவன் இளங்கோவன்,

இது ஒரு புத்தகம் ,ஐந்து பைசா கூட மதிப்பு இல்லாத இந்த குப்பைக்கு 5000 ரூபா விலையா?தூ.போங்கடா நாய்களா.