நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாழ்த்துரைத்த உள்ளங்களுக்கு நன்றி...

செம்மொழி விருதுப் பட்டியல் இந்திய குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து 20.10.2009 அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் வழியாக உலகிற்குத் தெரிய வந்தது.2006-07 ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதுப்பட்டியலில் என் பெயர் இருந்ததும் நண்பர்கள் பலரும் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.நான் பேருந்தில் பயணத்தில் இருந்ததால் உடனடியாக உறுதிசெய்துகொள்ள முடியவில்லை.நண்பர்கள் வழியாகவே அறிந்தேன்.இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த பிறகு செய்தியைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.

என் பேராசிரியர்கள் திரு.சம்பத்குமார்(நூலகர்,செந்தமிழ்க்கல்லூரி நூலகம், திருப்பனந்தாள்), பேராசிரியர் திரு.ச.திருஞானசம்பந்தம், பேராசிரியர் ஆறு.இராமநாதன்(தமிழ்ப் பல்கலைக் கழகம்) ஆகியோர் உடன் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.புதுவை இதழாளர் பி.என்.எசு.பாண்டியன் அவர்களும் வாழ்த்துரைத்தார்.

20.10.2009 இரவே புதுச்சேரியில் தீபம் தொலைக்கட்சி முதலில் செய்தியை வெளியிட்டது. மற்ற தொலைக்காட்சியினரும் செய்தியை உடன் வெளியிட்டு மகிழ்ந்தனர்.மறுநாள் காலையில் தினகரன் புதுச்சேரிப் பதிப்பில் என் படத்துடன் செய்தி வெளியானதும் புதுவை மாநிலம் முழுவதும் காலையில் செய்தி பரவியது.என் மாணவர்கள்,என்னுடன் பணி செய்யும் பேராசிரியர்கள், நண்பர்கள், தொலைக்காட்சியினர்,இதழாசிரியர்கள் பலரும் தொடர்புகொண்டு வாழ்த்துரைத்தனர்.நானும் என் வலைப்பூவில் செய்திக்குறிப்பொன்றை எழுதினேன்.மின் தமிழிலும் எழுதினேன்.அயல்நாட்டு நண்பர்கள் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.உலகின் பல பகுதியிலிருந்தும் மின்னஞ்சல்கள்,வாழ்த்துரைப்புகள் எனக்கு வந்தன.

காலையில் கல்லூரிப் பணிக்குச் சென்றேன்.பேராசிரியர்கள்,மாணவர்கள் அன்புடன் நேரில் வாழ்த்துரைத்தனர்.பூங்கொத்துகள்,இனிப்புகள் எனப் பரிமாறிக்கொண்டோம்.மாணவர்கள் எதிர்கொண்டழைத்தனர்.வழக்கத்திற்கு அதிகமாக அன்று அனைவர் முகத்திலும் நான் தெரிந்தேன்.நிற்க

என் பேராசிரியர் க.ப.அறவாணன்(மேனாள் துணைவேந்தர்),முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்),முனைவர் இரா,இளவரசு,முனைவர் தாயம்மாள் அறவாணன்,முனைவர் இராமர் இளங்கோ ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துரைத்தனர்.கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன்,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், திரு.தளவாய், திரு.அண்ணாகண்ணன்,அண்ணன் செயபாசுகரன் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர்.

என்னுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் வேதியியல் துறையில் ஆய்வு செய்து(1993-96) இப்பொழுது அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் பணி செய்யும் பேராசிரியர் மனோகரன் அவர்கள் பலவாண்டுகளுக்குப் பிறகு இணையத்தில் செய்தி படித்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்துரைத்தார்.எதிர்பாராத அவரின் அழைப்பு எனக்குப் பெருமகிழ்வு தந்தது.

வடக்குவாசல் ஆசிரியர் திரு.பென்னேசுவரன்,புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன், சங்கமம் லைவ் ஆசிரியர் விசயகுமார்,தட்சு தமிழ் ஆசிரியர் திரு.கான்,திரு.அறிவழகன் ஆகியோரும் மின்னஞ்சலில் வாழ்த்துரைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தட்சுதமிழ், சங்கமம் லைவ் தன் பக்கத்தில் என் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தன.இலங்கையில் வாழும் எழுத்தாளர் திரு.புன்னியாமீன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதுடன் தேசம் நெட்.இணையப்பதிப்பிலும்,இலங்கை இதழ்களிலும் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

அமெரிக்காவில் வாழும் திரு.வாசு.அரங்கநாதன் அவர்கள் செர்மனியில் நடைபெறும் தமிழ் இணையமாநாட்டிற்கு வரும் நண்பர்களுடன் இந்த மகிழ்வுச் செய்தியைப் பகிர்ந்துகொள்வேன் என்று உரைத்து மின்மடல் தீட்டியிருந்தார். அமெரிக்கா,கனடா, இலண்டன்,சிங்கப்பூர், மலேசியா,இலங்கையில் வாழும் பேராசிரியர்கள்.நண்பர்கள் பலரும் வாழ்த்துரைத்தனர்.கதார் நாட்டில் வாழும் என் மாமா மகன் திரு.கார்த்தி,செர்மனியில் உள்ள பெர்லின் நகரில் வாழும் என் சிறியமாமனார் திரு.சேகரன் குடும்பத்தினர் எனப் பலரும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்தினர்.

மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் தாளாளர் திரு.பழனியாண்டி அவர்களும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் அவர்களும் உள்ளன்போடு வாழ்த்து தெரிவிக்க நெகிழ்ந்துபோனேன்.சாகித்திய அகாதெமியின் உறுப்பினர் திரு.மகரந்தன் அவர்கள் நேரில் கண்டு வாழ்த்துரைத்தார்.மக்கள் உரிமைக்கூட்டமைப்பு திரு.கோ.சுகுமாரன்,ஓவியர் இராசராசன் ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.அரியாங்குப்பம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் திரு.அனந்தராமன் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்துரைத்தார்.

21.10.2009 புதன் இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை புதுவையின் புகழ்பெற்ற தொலைக்காட்சியான் சுப்ரீம் தொலைக்காட்சியில் என் நேர்காணல் ஒன்று நேரலை உரையாடலாக ஒளிபரப்பானது.முனைவர் பா.பட்டம்மாள் அவர்கள் நேர்கண்டார்கள்.

புதுவையில் நான் "செம்மொழி இளம் அறிஞர்" விருதுபெற உள்ள செய்தி பரவலாக அனைவருக்கும் தெரியவந்தது."ஐ தொலைக்காட்சியும்" என் இல்லம் வந்து ஒரு நேர்காணல் கண்டு வெளியிட்டது.மேலும் "ரெயின்போ தொலைக்காட்சியும்" சிறப்பாக நேர்காணல் கண்டு ஒளிபரப்பியது.

எனக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்ட செய்தியறிந்து நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், இதழ்களிலும்,தொலைக்காட்சிகளிலும் வாழ்த்துரைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரியவாகும்.அனைவரின் பெயரையும் என்னால் இந்த வலைப்பூவில் பதியமுடியாமல் போனமைக்கு வருந்துகிறேன். சிலருக்கு நன்றி தெரிவித்து உடனுக்குடன் விடையிட்டேன்.சிலருக்கு விடையிட,விரிவாகப் பேச நினைத்தும் கால நெருக்கடியால் இயலாமல் போனது.அந்த நல்லுள்ளங்கள் என்னைப் பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.

2 கருத்துகள்:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

மிக்க மகிழ்ச்சியான தருணமிது வாழ்த்துக்கள் .மேலும் பல விருதுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.
எங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி அவர்கள் செம்மொழி இளம் அறிஞர் விருதினைப் பெற்று எங்கள் பல்கலைகழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார்கள்.எங்கள் துறையே கோலகாலமா காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பிரபாகர் சொன்னது…

அய்யா,

அருமையாய் எழுதுகிறீர்கள். தொடர்வதற்கு வசதி செய்துகொள்ளுங்களேன் (Please add followers List) படிக்க வசதியிருக்கும்.

பிரபாகர்.