நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 1 அக்டோபர், 2009

புதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது.

மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் என் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை அனுப்ப ஆய்வரங்க அமைப்பாளரிடம் கட்டுரையை ஒப்படைப்பேன்.

தொடர்புகளுக்கு ஏற்பப் பெயரை அழைப்பிதழில் இணைக்க முடியும்.ஆய்வுக்கட்டுரைகள் நூல்வடிவம் பெற உள்ளன.

அஞ்சல் முகவரி:

பாவலர் சீனு.தமிழ்மணி
ஆசிரியர்-கரந்தடி,
50,நிலையத்தெரு,சண்முகாபுரம்,
புதுச்சேரி-605 009,இந்தியா

3 கருத்துகள்:

வினையூக்கி சொன்னது…

வாழ்த்துகள் சார்

வினையூக்கி சொன்னது…

வாழ்த்துகள் சார்

லஞ்சம் சொன்னது…

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/