நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 13 செப்டம்பர், 2008

தருமபுரி வந்து சேர்ந்தேன்...

தருமபுரியில் நாளை(14.09.2008) நடைபெறும் தமிழ் இணையப் பயிலரங்கிற்குப் புதுச்சேரியில் பகல் ஒருமணிக்குப் பேருந்தேறினேன். ஒக்கேனக்கல் செல்லும் பேருந்து என்பதால் நேரே தருமபுரியில் இரவு 7.10 மணிக்குப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கினேன். பொறியாளர் திரு.நரசிம்மன் அவர்கள் எனக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

மருத்துவர் கூத்தரசன் அவர்களின் ஏற்பாட்டின்படி சிக்கல் இல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டோம். இதற்கிடையே நண்பர் திரு கோபி அவர்களுக்கும் என் வருகையை உறுதிப்படுத்தியதால் அவரும் பேருந்து நிலையம் வந்துவிட்டார். நானும் நரசிம்மனும் உந்து வண்டியில் மருத்துவர் இல்லத்திற்கு வந்தோம். கோபி அருகில் உள்ள மருத்துவர் இல்லத்திற்கு நடந்துவந்துவிட்டார். மருத்துவர் அவர்களின் அன்பான வரவேற்பிலும் விருந்தோம்பலிலும் மகிழ்ந்தோம்.

பொறியாளர் கோபி அவர்கள் ஐதராபாத்தில் பணிபுரிவதையும், தகடூர், அதியன் தமிழ் உரைசெயலி, பற்றியெல்லாம் விரிவாகக் குறிப்பிட்டார். சுரதா, சௌந்தர், முகுந்து, நா.கணேசன், காசி,சங்கரபாண்டி,தமிழ்மணத்தின் பணிகள் பற்றி விரிவாக உரையாடினோம். நாளை நடைபெறும் நிகழ்ச்சி பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

காலையில் மீண்டும் வருவதாகக் கோபி அவர்கள் சொல்லி விடைபெற்றார். நாளை காலை விழா நடைபெறும் விஜய் கல்வியியல் கல்லூரியிலிருந்து செய்திகளுடன் வருவேன்.

1 கருத்து:

S.Lankeswaran சொன்னது…

தங்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகின்றேன் ஐயா