நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

தமிழ் இணையப் பயிலரங்கம் தருமபுரி

 தமிழ் இணையப்பயிலரங்கம் இன்று(14.09.2008) காலை பத்து மணிக்குத் தருமபுரியில் அமைந்துள்ள விசய் பெண்கள் பதின்நிலை (மெட்ரிக்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதால் நானும்.நண்பர்களும் குழுமியுள்ளோம். நண்பர்களுள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மருத்துவர் கூத்தரசன், முகுந்து, கோபி, நரசிம்மன், சண்முக வடிவேல், நஞ்சப்பன், இளவரசன் உள்ளிட்டவர்கள் என்னுடன் உள்ளனர்.

 பள்ளியின் தாளாளர் திரு டி.என்.சி.மணிவண்ணன் அவர்கள் எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துள்ளார். அழகிய பள்ளி வளாகம், அதில் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கம், இணைய இணைப்புகள் சிறப்புடன் உள்ளன. கல்வியியல் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர் பயிற்சி மாணவர்களும், தருமபுரி பகுதியைச் சேர்ந்த கணிப்பொறி ஆர்வலர்களும் ஒருங்கு கூடியுள்ளனர். விரைவில் பயிலரங்கம் தொடங்க உள்ளது. உடனுக்குடன் செய்திகளை என் பக்கத்தின்வழி இணைய உலக நண்பர்களுக்கு வழங்குவேன். பயிலரங்கில் உரையாடல் நேரத்தில் பார்வையாளர்களுடன் உரையாட இணைப்பில் உள்ளவர்களை அழைப்பேன்.

கருத்துகள் இல்லை: