நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 15 செப்டம்பர், 2008

தருமபுரித் தமிழ்ச்சங்கம்: இணையத் தமிழறிஞர் விருதுபெறல்,சிறப்புரை படங்கள்...


இணையத் தமிழறிஞர் விருது


மு.இளங்கோவன் விருதுபெறல்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


கோபி விருது பெறல்


முகுந்து மென்பொருளறிஞர் விருது பெறல்


மேடையில் கோபி,முகுந்து,மு.இ,கூத்தரசன்


 தருமபுரித் தமிழ்ச்சங்கம் என் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி 14.09.2008 மாலை ஏழு மணியளவில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் இணையத்தமிழறிஞர் என்னும் விருதை எனக்கு வழங்கிப் பாராட்டியது. நண்பர்கள் முகுந்து (தமிழா.காம்), கோபி (அதியன், தகடூர்) ஆகியோருக்கும் விருது வழங்கி எங்கள் பணிகளைப் பாராட்டியது.

 விழாவில் யான் தமிழு இணையமும் என்னும் தலைப்பில் ஒருமணி நேரம் உரையாற்றினேன். மருத்துவர் கூத்தரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பெரும்பணிகள் செய்தார். தருமபுரி சார்ந்த தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் மிகுதியாக வந்திருந்தனர். விரிவான செய்தியைப் பின்பு உள்ளிடுவேன். படங்கள் சில பார்வைக்கு வைத்துள்ளேன்.

7 கருத்துகள்:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

சிறப்பாக நடைபெற்று முடிந்த இந்த பயிலரங்கு மற்றும் சங்க விழா இரண்டிலும் நான் பங்கேற்றது மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

பிறந்த மண்ணில், நான் தமிழ் கற்ற தமிழாசிரியர்களும் ஆன்றோர்களும் நிறைந்த அவையில் இணையத் தமிழ் மென்பொருளறிஞர் விருது பெற்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இவ்வேளையில்,

மருத்துவர். கி. கூத்தரசன், தாங்கள் மற்றும் எனக்கு விருது அளிக்க பரிந்துரைத்த அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

S.Lankeswaran சொன்னது…

சரியான தருனத்தில் தங்களுக்கு கிடைத்த வெகுவான பாரட்டு. மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

விருது பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

-/சுடலை மாடன்/- சொன்னது…

வாழ்த்துகள் திரு.இளங்கோவன். உங்களைப் (பதிவுகளைப்) பின் தொடர முடியாத அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள். தொடரும் உங்கள் தமிழறிஞர்கள்-மற்றும்-இணையத்தமிழ் அறிமுகப் பணிகளுக்கு மிக்க நன்றி.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Mugunth/முகுந்த் சொன்னது…

இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.

Kasi Arumugam சொன்னது…

நிகழ்ச்சிக்கும், விருது பெற்றமைக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

Venkatesh சொன்னது…

விருது பெற்ற மூவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்

நன்றி - வெங்கடேஷ்