நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 11 செப்டம்பர், 2008

தருமபுரியில் தமிழ் இணையப் பயிலரங்கும்,சிறப்புரையும்.


தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை - விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (14.09.2008) காலை பத்து மணிக்குத் தருமபுரி, விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவர் கி. கூத்தரசன் வரவேற்புரையாற்ற உள்ளார். திரு. டி.என்.சி. மணிவண்ணன் முன்னிலையில் நடைபெறும் பயிலரங்கில் முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி), திரு.சு.முகுந்தராசு (தமிழா.காம், பெங்களூர்), திரு,கோபி (தகடூர், அதியமான் மென்பொருள் உருவாக்கியவர், ஐதராபாத்து) கலந்துகொள்கின்றனர். தமிழ் இணையம், தமிழ்த் தட்டச்சு, தமிழ் 99 விசைப்பலகை, எ.கலப்பை, ஒருங்குகுறி, வலைப்பூ உருவாக்கம், தமிழ்மணம், மின்னஞ்சல், உரையாட்டு, குழுக்கள், நூலகங்கள் பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்சியளிக்க உள்ளனர். திரு. சண்முகவடிவேல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

தருமபுரித் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறப்புரையரங்கம் தலைப்பு :
தமிழும் இணையமும்

14.9.2008 ஞாயிறு மாலை 6 மணிக்குத் தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் பெரியார் அரங்கில் "தமிழும் இணையமும்" குறித்து முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்(புதுச்சேரி) சிறப்புரையாற்ற உள்ளார். திரு.சு.முகுந்தராசு (தமிழா.காம்,பெங்களூர்) அவர்கள் தலைமையில் விழா நடைபெறும்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் பற்றித் தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியை மதித்தும், தமிழ் நாளேடுகளில் தமிழ் இணையம் பற்றி எழுதி வருவதைப் போற்றியும். தமிழ்ப் பணியாற்றியவர்களின் வாழ்க்கையை இணையத்தில் பதிவு செய்து வருகின்றமையைச் சிறப்பிக்கும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் "இணையத் தமிழறிஞர்" என்னும் மதிப்புமிகு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் வழக்கறிஞர் திரு.ந.இராசேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றவும், மருத்துவர் கி. கூத்தரசன், திரு. ப. நரசிம்மன் உரையாற்றவும் உள்ளனர்.

11 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

தமிழினை இணையம் ஊடாக வளர்க்க தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

செல்வமுரளி சொன்னது…

Dear Brother,
good news from our district
i will try to come there. i am your near.

M.S.Murali
CEO
Visual Media
Krishangiri

செல்வமுரளி சொன்னது…

hi pls send to your mobile no. i will contact you regarding this event.
thank you
my mobile no : 99430 94945

keep touch

M.S.Murali

Venkatesh சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்

Yuvaraj சொன்னது…

தமிழிற்கினிய மு.இளங்கோவன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
தங்களை நேரில் வந்தே நிறைய பேச வேண்டும் என்றே எண்ணியிருந்தேன். அதற்கு காலம் விரைவில் வழிகொடுக்கும் என்றே எண்ணுகிறேன்.
"கணினியில் தமிழ்" என்கிற முனைப்பில் இணையத்திலும், மக்கள், மாணவர் இடத்திலும் வழங்கி வரும் தங்களின் பல்வேறு தொண்டினை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டும்.
மின்னுலகத்தில் வழங்க பெறும் தமிழின் உயர்நிலை மண்ணுலகத்தில் வழங்க நாம் பாடுபட வேண்டும். அதற்கான வலுவான பயணம் நாம் மின்னுலகில் மேலும் மேலும் உயரவேண்டியிருக்கிறது.
கணினியல்லாத பிற துறையினர் மின்னுலக வாயிலாக எளிதாக கணினியில் உட்புக வேண்டும்.
அந்த வகையில் அரிய பணியாற்றிவரும் தங்களின் அரும்பணி போற்றி, "இணையத் தமிழறிஞர்" என்னும் மதிப்புமிகு பட்டம் வழங்கிச் சிறப்பிக்க உள்ளனர் எனும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

தொடரட்டும் தங்கள் தமிழ்த்தொண்டு....!

இணைவோம் தமிழர்களாய்!
இயற்றுவோம் தமிழால்!!!


அன்பன்..........
வெ.யுவராசன்.

நா. கணேசன் சொன்னது…

தருமபுரியில் இணையப் பயிலரங்கம் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

பல துறையிலும் தமிழை முன்னெடுத்துச் செல்ல (வெறும் சினிமா, அரசியல் கிசுகிசு மட்டுமன்றி) இணையமே வழி. வலைப்பதிவுகள், அவற்றின் தோரண வாயிலாக விளங்கும் தமிழ்மணம் போன்றவற்றைப் பற்றி விளக்கி அறிமுகம் செய்வதால் இன்னும் சில நூறு பதிவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உருவாவார்கள் என்பது திண்ணம்.

மிக்க அன்புடன்,
நா. கணேசன்

balachandar muruganantham சொன்னது…

பயிலரங்கம் நன்கு நடை பெற வாழ்த்துக்கள்

- பாலச்சந்தர் முருகானந்தம்,
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net

Sanjai Gandhi சொன்னது…

ஆஹா.. நம்ம ஊர்லையா? முன்னமே தெரிஞ்சிருந்தா எப்படியாவது வந்திருப்பேனே.. பென்னாகரம் சாலையில் உள்ள பள்ளி தானே..

பயிலரங்கம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
தருமபுரியில் உள்ள விஜய் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையப்பயிலரங்கு நடைபெறுகிறது. முகுந்து,கோபி உள்ளிட்டமென்பொருள் அறிஞர்களுடன் நானும் கலந்துகொள்கிறேன்.
மு.இளங்கோவன்

செல்வமுரளி சொன்னது…

dear sir kindly give landmark & address....

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் திரு.செல்வமுரளி.
தருமபுரி விசய் பெண்கள் மெட்ரிக் மேனிலைப்பள்ளி,காந்திநகர் என்ற முகவரியில் நிகழ்ச்சி.

மாலை தருமபுரித் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி பெரியார் அரங்கம்,