நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 17 ஜூலை, 2008

சந்தனக்காடு வெற்றிவிழாப் படங்கள்...

சந்தனக்காடு என்னும் பெயரில் வீரப்பன் வாழ்க்கையும் அதிரடிப்படையினரின் செயல்பாடுகளும் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.உலகத் தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் 171 நாள் வெற்றியாக ஒளிபரப்பப்பட்டது.இதன் வெற்றிவிழா சென்னை இராயப்பேட்டை மியூசிக் அகாதெமியில் 16.07.2008 மாலை தொடங்கியது.

திருமானூர் குமார் குழுவினரின் தப்பாட்டத்துடன் விழா தொடங்கியது.அடுத்து சந்தனக்காடு தொடரில் இடம்பெறும் பாடலைத் தாய்த்தமிழ்ப் பள்ளி மழலையர்கள் பாடி மகிழ்ச்சியூட்டினர்.
மக்கள் தொலைக்காட்சியைச் சார்ந்த திரு.கார்மல் அனைவரையும் வரவேற்றார்.

சந்தனக்காடு உருவான கதை திரையிடப்பட்டது.இயக்குநர் மகேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.திரைத்துறையைச் சேர்ந்த கலைப்புலி தாணு,சீமான்,பாலு மகேந்திரா,திருச்செல்வம்,சமுத்திரக்கனி,பாலாசி சக்திவேல்,ஓவியர் வீரசந்தனம்,பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்,காசி ஆனந்தன்,கண்மணி குணசேகரன், இராசேந்திர சோழன், புட்பவனம் குப்புசாமி உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்குப் பரிசு வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார்.தயாரிப்பாளர் உலகரட்சகன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கவிஞர் செயபாசுகரன்,முனைவர் திருப்பூர் கிருட்டிணன், கி.த.பச்சையப்பன், திரு.கிருட்டிணசாமி,அனிதா குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் நிறைவுரை


தாய்த் தமிழ்ப்பள்ளி மழலைகள் பாடலிசைத்தல்


பறையாட்டம்


புட்பவனம் குப்புசாமி,அனிதா குப்புசாமி


கராத்தே இராசா பரிசுபெறல்


சீமான் உரை


திருச்செல்வம் உரை


பாலு மகேந்திரா உரை


பாலாசி சக்திவேல் உரை


நடிகை தீபிகாவுக்குப் பாராட்டு


இயக்குநர் வ.கெளதமன் சிறப்பிக்கப்படுதல்


இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்குப் பரிசளிப்பு


முனைவர் திருப்பூர் கிருட்டிணன்,செயபாசுகரன்,வீரசந்தனம்

5 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த விழாவின் மூலம் நன்மை என்று நான் கருதுவது...
சண்டை சச்சரவு என்ற குழப்பத்தில் இருந்த புஷ்பவனம்,
குப்புசாமி தம்பதிகள் ஒன்றாக வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி !

bala சொன்னது…

முனைவர் மு இளங்கோவன் அய்யா,

சந்தன மர கொள்ளைக்காரன் வீரப்பன் வீர வரலாற்றை மக்களிடம் எடுத்து சென்ற மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்.அடுத்ததாக பங்க் குமார்,காடுவெட்டி குரு போன்றவர்கள் மக்கள் நலனுக்காக கொலை ,கொள்ளை பல செய்து சாதனை படைத்த லீலைகளையும் காவியத்தில் வைத்து,சீரியலாக எடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

பாலா

Yuvaraj சொன்னது…

வணக்கம்.
நேற்று(16/07/08) நடந்த சந்தனக்காடு வெற்றிவிழா நிகழ்வுகளை நிழற்படங்கள் மூலம் கண் முன்னே கொண்டுவந்து நிகழ்வை நேரில் கண்ட திருப்தியை அளித்துள்ளீர்கள்.அதற்கு முதற் நன்றியை உரிதாக்குகின்றேன்.

சந்தனக்காடு மூலம் உண்மையைக் காட்டிய திரு. வ.கெளதமன் பாராட்டுக்குரியவர்.இதுபோன்ற மறைக்கப்பட்ட உண்மைகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர வேண்டும். அதற்கு இதுபோன்ற வெற்றிவிழாகளும்,பாராட்டுகளும் ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்நேரத்தில் தங்களோடு சேர்ந்து, சந்தனக்காடு குழுவினரை மனதார வாழ்த்துகிறேன்.

Unknown சொன்னது…

வணக்கம்,
தமிழகத்தில் தொலைக்காட்சி விழாக்களிலும், திரைத் துறை விழாக்களிலும் நடந்தேறும் அசிங்கங்கள் இல்லாமல், ஒரு தொடரின் வெற்றி விழாவிலும் கூட, மண்ணின் மணத்தை மலரச்செய்துள்ளனர். பாராட்டுக்குரியது.

உண்மை நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியமை போற்றுதலுக்குரியது. தொடரட்டும், வாழ்த்துக்கள்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் கருத்திற்கு நன்றி.
மு.இ