நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 5 ஜூலை, 2008

இணையக்குழு சிறப்பு விருந்தினர்கள் வருகை...


சீதாலெட்சுமி,மு.இளங்கோவன்


வேந்தன் அரசு,மு.இளங்கோவன்


நிலாரசிகன்,இளம்பாரதி,வேந்தன் அரசு

தமிழ் மரபு சார்ந்த செய்திகளில் யான் கவனம் செலுத்தி எழுதி வருவதை அறிந்த கண்ணன் ஐயா அவர்கள் மின்தமிழில் என் படைப்புகளை அறிமுகம் செய்தார்கள்.யானும் மின்தமிழில் எழுதி வந்தேன்.மின்தமிழ் வழியாக என்னை அறிந்த இணையக்குழு நண்பர்கள் சிலர் புதுச்சேரியில் உள்ள என் தங்குமிடத்திற்கு 29.06.2008 ஞாயிறு பிற்பகல் வருகை தந்தனர்.சிறப்பு விருந்தினர்களான அவர்களின் வருகை முன்பே திட்டமிடப்பட்டதால் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

வந்திருந்தவர்களின் விவரம் :

சீதாலெட்சுமிஅவர்கள்(அமெரிக்கா)
வேந்தன் அரசு(அமெரிக்கா)
இரா.வாசுதேவன்(சென்னை)
நிலாரசிகன்(சென்னை)
இளம்பாரதி(பேரா.துளசிதாசு)(புதுச்சேரி)

நாட்டுப்புறப்பாடல்கள் பற்றி உரையாடினோம்.பாடினோம்.என் ஆய்வு முயற்சிகளை விரிவுப்படுத்தச் சொன்னார்கள்.இணையத்தில் இடச்சொன்னார்கள்.சீதாலெட்சுமி அவர்களுக்கு நாட்டுப்புறப்பாடல்களில் நல்ல ஈடுபாடு கண்டு மகிழ்தேன்.அவர்களும் சில பாடல்களைப் பாடிக் காட்டினார்கள்.நானும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக் காட்டினேன்.சீதாலெட்சுமி அவர்களின் பிறந்த ஊர் எட்டயபுரம் அருகில் என்றதாக நினைவு.

அப்பகுதியில் உள்ள மேலமுடிமண் என்ற ஊரில் பிறந்த திரு.பிழைபொறுத்தான் ஐயா அவர்கள் என் வாழ்க்கையோடு தொடர்புடையவர்கள் என்பதால் அப்பகுதி மக்கள்மேல் எனக்கு அன்பும் மதிப்பும் மிகுதி.

நீண்ட உரையாடலுக்குப் பிறகு சில படங்கள் நினைவாக எடுத்துக்கொண்டடோம். அவர்களின் நினைவுகளை என் உள்ளத்தில் விதைத்துச் சென்றமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

குடும்பத்தால்,ஊரால்,மொழியால்,சாதியால்,மதத்தால்,நாட்டால் இணைந்து உறவாடுபவர்கள் என்ற நிலை மாறி இணையக்குழுவால் ஒன்றானமை மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாகும். இணையம் மக்களை எவ்வாறெல்லாம் இணைக்கிறது.நினைக்கும் பொழுது வியப்பே மேலிட்டு நிற்கிறது.

5 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

சந்திப்பில் மகிழ்ந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Thamizhan சொன்னது…

தமிழுக்கும்,தமிழருக்கும்
பொற்காலம்
இணையத்தின் மூலம்
பிறந்திருக்கிறது.
உலகத் தமிழிணமே
ஒன்று பட்டால்
முடியாதது இல்லை!

நிலாரசிகன் சொன்னது…

நல்லதொரு சந்திப்பு.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இ

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இ