நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 ஜூலை, 2008

செயமூர்த்தியின் "திருவிழா" நாட்டுப்புறப் பாடல்கள் இசைக் குறுவட்டு வெளியீடு

புதுச்சேரியில் 07.07.2008 திங்கள் கிழமை மாலை 5 மணிக்குப் புதுச்சேரி புதியபேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் பாடகர் செயமூர்த்தி அவர்கள் பாடிய "திருவிழா" நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியிடப்பட உள்ளது.

முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் குறுவட்டினை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கவும், தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் குறுவட்டினைப் பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்தவும் உள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருட்டிணன்அவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும், பேராசிரியர் ப.அருளி,கவிஞர் செயபாசுகரன்
உள்ளிட்டவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.

தெ.செயமூர்த்தி,புருணா செயமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவர்.அனைவரும் வருக என மக்கள் இசைக்குழுவினர் அழைத்து மகிழ்கின்றனர்.

தெ.செயமூர்த்தி அவர்களின் செல்பேசி எண் :
+ 91 9443492698

1 கருத்து:

தமிழ்நாடன் சொன்னது…

நாட்டுப் "புற" பாடலாயினும், அனைவரின் "அக" மகிழ்விக்கும் பாடல்கள். செயமூர்த்திக்கு வாழ்த்துக்கள்.