நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஜூலை, 2008

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா...

சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெறுகிறது. புதுச்சேரித் தகவலாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 10.07.2008,வியாழக் கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தேசியக்கல்விக் கழகத்தில் தமிழ் மொழி, பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்த இவரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி நடைபெறும் விழாவில் கவிக்கோ கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார்.

முனைவர் மு.சுதர்சன் அவர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கவும், முனைவர் சு.தில்லைவனம், முனைவர் ப.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார். புதுச்சேரித் தகவலாளர் மன்றம், தொல் இளமுருகு பதிப்பகம் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறது.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

உலகத்தமிழர்களுக்கு தாயகத் தமிழர்களின் பாராட்டுதலும், ஆதரவும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகும். வாழ்த்துக்கள்

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொன்னது…

முனைவர் மு.இளங்கோவன்

தங்கள் பதிவுகள் பாராட்டும் அளவிற்கு உரியன. (சந்தனக் காடு முதல் சிங்கப்பூர் வரை)
ஒரு நிகழ்வைக் காண இயலாதார், அந்நிகழ்வைக் காக்கவியலாதார் கொண்ட வருத்தத்தைப் போக்கும் மருந்தாக, அந்நிகழ்வோடு தொடர்புடையோர் கருதுவர்.

அவ்வாறானாரில் நானும் ஒருவனாகிப் பாராட்டுகிறேன்

இவண்

இரவா