மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரின் இயக்குநர் திரு.வ.கெளதமன் அவர்கள் எங்கள் அன்பான அழைப்பை ஏற்று இன்று(11.07.2008) மாலை எங்கள் புதுச்சேரி இல்லத்திற்கு வந்தார்கள்.சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா அழைப்பினை வழங்கி எங்களை நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைத்தமை வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
எங்கள் உரையாடலின் பொழுது 'திரட்டி' உருவாக்குநர் திரு வெங்கடேசு அவர்களும் உடனிருந்தார். நாட்டுப்புறப்பபாடல்கள் பல பாடி எங்கள் ஊரின் பாடல்களை இயக்குநருக்கு அறிமுகம் செய்தேன். மண்ணின் மணம் விரும்பும் இயக்குநர் அவர்கள் என் பாடல்களை ஆர்வமுடன் கேட்டு ஊக்கப்படுத்தினார்.அவர்களின் திரைத்துறை முயற்சிகள் பற்றியும் பல்வேறு திரைப்பட உருவாக்கம்,இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம்.
இணைய நண்பர்களுக்காக அழைப்பிதழைப் பார்வைக்கு வைத்துள்ளேன்.
6 கருத்துகள்:
இனத்தையும் வனத்தையும் சிதைத்த துரோகிகளையும் விரோதிகளையும் தோலுரித்துக் காட்டிய தொடர். சந்தனக்காடு தொடர் இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்கள்
திரு.தமிழ்நாடன் அவர்களுக்கு...
தங்களின் ஊக்கமூட்டும் பதிவிற்கு நன்றி.
மு.இ
Vazhthukgalum, vanakgangalum
anbudan
ezhilvasanthan
எழில்,
பதிவிற்கு நன்றி.
மு.இ
வாழ்த்துக்கள்
முன்னாடியெல்லாம் ஹிரோவ ரவுடியா காட்டுவாங்க இப்போ ரவுடிய ஹிரோவா காட்டுறாங்க... எல்லாம் கால கொடுமை.
வீரப்பனே பேட்டியில் சொல்லியிருக்கிறான் எத்தனை பேரை கொன்றிருக்கிறானென்று அது போக
எததனை மரத்தை அழித்திருப்பான்,எத்தனை யானைகளை கொன்றிருப்பான், இவனுக்கெல்லாம் வக்காலத்து வாங்குகிறோமே, எடுத்த இயக்குனருக்கும் பார்கின்ற நமக்கும் வெட்கமே இல்லை.
கருத்துரையிடுக