நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

13 வது உலகத் தமிழ் இணைய மாநாடு தொடக்கவிழா அழைப்பிதழ்
பேரன்புடையீர்!   

13 வது உலகத் தமிழ் இணைய மாநாடு, எதிர்வரும்2014 செப்டம்பர் 19, 20, 21 ஆகிய நாட்களில்  புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா 19-09-2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தி அவர்கள் விழா தலைமையேற்கவும், புதுவை மாநில முதலமைச்சர்        மாண்புமிகு ந. ரங்கசாமி  அவர்கள்         மாநாட்டைத் தொடங்கி வைக்கவும், உத்தமம் ஆலோசகர் பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவும் உள்ளனர். அவ்வமையம் புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. இராதாகிருட்டிணன் அவர்களும், காலாப்பட்டு சட்டமன்ற உ றுப்பினர் திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்களும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களும் வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கிறார்கள்.

13 வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2014 தொடக்க விழாவிற்கு
வருகை தந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
     
முனைவர் வாசு. அரங்கநாதன்,
தலைவர், உத்தமம்
மற்றும் விழாக்குழுவினர்

இடம்: பண்பாட்டு வளாகம் (Cultural Complex)
புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605 014
நாள்: 19-09-2014 வெள்ளிக்கிழமை
                                 
 தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல்
 19-09-2014, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி

மொழி வாழ்த்து


      உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புப் பேருரை    
              மாண்புமிகு ந. ரங்கசாமி அவர்கள்
                               முதலமைச்சர், புதுச்சேரி அரசு
 

வரவேற்புரை      :  முனைவர் வாசு.அரங்கநாதன்,
                        தலைவர், உத்தமம்

நோக்கவுரை       :  முனைவர் கு. கல்யாணசுந்தரம்
                        (சுவிஸ் தேசியத் தொழில்நூட்பப் பல்கலைக்கழகம்)
                    தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிக்குழு

தலைமையுரை    :  பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தி
                        துணைவேந்தர், புதுவைப் பல்கலைக்கழகம்
      
சிறப்புரை          :  பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன்
                        ஆலோசகர், உத்தமம்

வாழ்த்துரை         : திரு. இரா. இராதாகிருட்டிணன்
                         நாடாளுமன்ற உறுப்பினர், புதுவைத் தொகுதி
                       : திரு.பி.எம்.எல். கல்யாணசுந்தரம்
                         சட்டமன்ற உறுப்பினர், காலாப்பட்டுத் தொகுதி
                        : முனைவர் எல். இராமமூர்த்தி,
                         இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்


நன்றியுரை           : முனைவர் மு. இளங்கோவன்

 


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

13வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் ஐயா