நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மு.இளங்கோவன் இலண்டன் செலவு...இலண்டனில்14.08.2013 முதல் 18.08.2013 வரை உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு அறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் நூற்றாண்டினை நினைவுகூரும் வகையில் இலண்டன் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு ஆய்வுரைகள், கட்டுரைகள் வழங்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் வருகைதர உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஒலி ஒளி ஆவணப்படுத்தும் முயற்சிகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்க முனைவர் மு.இளங்கோவன் செல்கின்றார். இலண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் உரையாற்றவும் இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் இணைய வளர்ச்சி, அயலகத் தமிழறிஞர்கள் குறித்த பொருண்மைகளிலும் பிற இடங்களில் மு.இளங்கோவன் உரையாற்ற உள்ளார். தமிழ் இணைய நண்பர்கள் சந்திப்பு, வலைப்பூ நண்பர்களின் சந்திப்பு, முகநூல் நண்பர்களின் சந்திப்பும் உண்டு.

மு.இளங்கோவனின் இலண்டன் நிகழ்ச்சி நிரல் பற்றி அறிய muelangovan@gmail.com என்ற தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

இலண்டன் தொடர்புக்கு:
திரு. தம்பு அவர்கள் 0044-1689857639
திரு. பாரிஸ் இராஜா அவர்கள் 0044 - 7904509817

1 கருத்து:

நா.முத்துநிலவன் MUTHUNILAVAN சொன்னது…

அய்யா வணக்கம்.
தங்களின் உலகப் பயணம் தமிழுக்குப் பயன்படட்டும். கணித்தமிழும், இசைத்தமிழும் தங்களால் வளரட்டும். அங்குள்ள நம் இணைய, வலைப்பக்க, முகநூல் நண்பர்களுக்கு அன்பைச் சுமந்து செல்லும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்